தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியின் காரணமாக இன்று வீட்டுக்கு வீடு கணினி என்றாகி விட்டது. என்றாலும் இரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு முன் கணினி என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தது.


IBM PC XT விண்டோஸ்


எனவே அன்று அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தயாரிப்புக்களை அதிகமானவர்கள் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகுக்கு அறிமுகமானது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் இயங்குதளமான விண்டோஸ் 1.0 இயங்குதளமானது 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

 

விண்டோஸ் 1.0

 

இது IBM நிறுவனத்தின் "IBM PC XT (Model 5160)" எனும் கணினிகளில் இயங்கியது. இந்த கணினியானது 4.77 MHz வேகத்தில் இயங்கக்கூடிய Intel 8088 microprocessor ஐ கொண்டிருந்ததுடன் 128 KB RAM நினைவகத்தை கொண்டிருந்தது. அத்துடன் இதன் வன்தட்டு (Hard Disk) 10 MB ஆகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இயங்குதளம் அன்று 99 அமெரிக்க டொலர்களாக விலை குறிக்கப்பட்டிருந்தது.

இந்த இயங்குதளத்தை பின்வரும் இணைப்பின் மூலமாக உங்கள் இணைய உலாவியிலும் பயன்படுத்திப் பார்க்கலாம்.
Love to hear what you think!

2 comments:

 
Top