ஆண்ட்ராய்டு என்றால் என்ன?

ஆண்ட்ராய்டு என்பது ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு இயங்குதளமாகும். இது ஆரம்பத்தில் "ஆன்டி ரூபின்" என்பவராலே உருவாக்கப்பட்டது. பின்னர் இதன் உரிமத்தை வாங்கிய கூகுள் நிறுவனம் இன்று வரை இந்த இயங்குதளத்தை நிர்வகித்து வருகின்றது.

ஆண்ட்ராய்டு என்றால் என்ன?


ஆண்ட்ராய்டு எனும் பெயருக்கு எதுவித மறைமுக விளக்கங்களும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. எனினும் ஆண்ட்ராய்டு என உச்சரிக்கும்போது ஆன்டி ரூபின் என்ற பெயர் தொடர்புபடுவதை உணர முடிகிறது.

இந்த இயங்குதளத்தின் ஒவ்வொரு புதிய பதிப்பையும் ஆங்கில எழுத்து A தொடக்கம் Z வரை ஒரு வரிசை கிரமப்படியே அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம். அவைகள் ஒவ்வொன்றும் ஏதாவதொரு இனிப்புப் பண்டத்தின் பெயரை கொண்டு அமைவதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அண்மைய பதிப்பு மார்ஷ்மல்லோ என்பதாகும். இதன் அடுத்த பதிப்பு "N" எனும் ஆங்கில எழுத்தை கொண்டு துவங்கும் என்று உறுதியாக கூறலாம்.

"ஆண்ட்ராய்டு N" என தற்போது அழைக்கப்படும் இதன் சோதனை பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. என்றாலும் இது இன்னும் உத்தியோகபூர்வமாக பகிரங்க பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. (மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும்)

ஸ்மார்ட் போன் இயங்குதள சந்தை பகிர்வு

2015 ஆம் ஆண்டு மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுக்கான கணிப்பின் படி ஆண்ட்ராய்டு இயங்குதளம் உலகில் இருக்கக் கூடிய 80 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்மார்ட் போன்களில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ் இயங்குதளமாகும். (மேலே உள்ள வரைபடத்தின் படி நீல நிற கோடுகளால் காட்டப்படுவது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வளர்ச்சிப்படியாகும்)

ஆண்ட்ராய்டு பற்றிய மேலும் பல சுவாரஷ்யமான தகவல்கள்


1. ஆண்ட்ராய்டு இயங்குதளம் 2003 ஆம் ஆண்டில் ஆன்டி ரூபின் என்பவரால் உருவாக்கப்பட்டது. பிறகு இதனை கூகுள் நிறுவனம் 2005 ஆண்டில் 50 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியது.


HTC G1 ஸ்மார்ட் போன்


2. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த முதல் ஸ்மார்ட் சாதனம் HTC G1 என்பதாகும். இது 2008 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

3. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அண்மைய பதிப்பு மார்ஷ்மல்லோ (Marshmallow) எனும் பதிப்பாகும் 2015 செப்டம்பர் 29 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.

4. ஆண்ட்ராய்டு இயங்குதளம் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முதலாக மேம்படுத்தப்பட்டது. அந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பின் பெயர் கப் கேக் என்பதாகும்.

5. கப் கேக் தொடக்கம் மார்ஷ்மல்லோ வரையான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்புக்கள் பின்வருமாறு.

 • Android Cupcake =====> Apr 2009
 • Android Donut =====> Sep 2009
 • Android Eclair =====> Oct 2009
 • Android Froyo =====> May 2010
 • Android Gingerbread =====> Dec 2010
 • Android Honeycomb =====> Feb 2011
 • Android Icecream Sandwich =====> Oct 2011
 • Android Jelly been =====> July 2012
 • Andoid Kitkat =====> Oct 2013
 • Andoid Lollipop =====> Oct 2014
 • Andoid Marshmallow =====> Sep 2015

தொடர்புடைய இடுகை: 


6. ஆண்ட்ராய்டு பாவனையாளர்களில் 60% ஆனவர்கள் 34 வயதிற்கும் குறைந்தவர்கள் ஆகும்.

7. ஆண்ட்ராய்டு பாவனையாளர்களில் 34 சதவீதமானவர்கள் பிரதானமாக மின்னஞ்சலை நிர்வகிப்பதர்காக தமது Android சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.

8. ஆண்ட்ராய்டு சாதனம் மூலம் விளையாட்டுக்களில் (Playing Games) ஈடுபடுவதனை 21% ஆனவர்கள் பிரதானமாகக் கொண்டுள்ளனர்.

9. *#06# எனும் குறியீட்டை அழுத்துவதன் மூலம் ஆண்ட்ராய்டு சாதனத்தின் IMEI Number ஐ அறிந்து கொள்ளலாம்.


தொடர்புடைய இடுகை:


10. ஒவ்வொரு நாளும் 15000 இற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் உருவாக்கப்படுகின்றன.

11. 62 சதவீதமான ஆண்ட்ராய்டு செயலிகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.12. உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தின் வேகத்தை பின்வரும் முறைகளில் அதிகரித்துக் கொள்ளலாம்.

❶ உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தின் பின்புலப்படமாக (நகரும் படங்கள்) Live Wallpapers இடுவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

❷ Task Killer செயலி ஒன்றை பயன்படுத்துங்கள். இதற்கு க்ளீன் மாஸ்டர், அட்வான்ஸ் மொபைல் கேர், பவர் க்ளீனர்Systweak போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.

❸ நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற செயலிகளை நீக்கிவிடுங்கள். இந்த செயற்பாட்டுக்கு  Easy Uninstaller எனும் செயலி சிறந்த வசதிகளை தருகிறது.

❹ உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்துக்கான மேன்படுத்தப்பட்ட பதிப்பு வழங்கப்பட்டிருப்பின் அதனை மேம்படுத்திக்கொள்ளுங்கள். (Update)

❺ ஹோம் ஸ்க்ரீனில் தோன்றக்கூடிய தேவையற்ற விட்ஜெட்களை முடக்கிவிடுங்கள்.


மேலும் செட்டிங்ஸ் பகுதியில் சிறியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை மிக வேகமாக இயங்க வழிவகுக்கலாம் இது பற்றி விரிவாக அறிய பின்வரும் பதிவை பார்க்க:Sources: Wikipedia. facebook


Love to hear what you think!

4 comments:

 
Top