வேகமாக இயங்கும் இன்றைய உலகில் ஒரே நேரத்தில் பல்வேறு விடயங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

ஆண்ட்ராய்டு பாச்சி


எனவே நாம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை மேற்கொள்ளும் போது செய்ய வேண்டிய அடுத்த விடயத்தை மறந்துவிடும் சந்தர்பங்களும் ஏற்படுவதுண்டு.


ஆகவே நாம் செய்ய வேண்டிய கருமங்களை தவறாமல் செய்வதற்கு, அவைகள் தொடர்பில் குறிப்புக்களை எடுப்பதற்கும் அவற்றை எமது ஸ்மார்ட் போன் மூலம் ஞாபகப்படுத்திக் கொள்வதற்கும் என ஏராளமான செயலிகள் உள்ளன.

எனினும் இதற்கென "பாச்சி" எனும் புதியதொரு செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


ஆண்ட்ராய்டு மைக்ரோசாப்ட்Parchi செயலி

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்துகிறது என்றால் எப்படியும் அதில் ஒரு புதிய விடயம் இருக்கும் அல்லவா?


இதன் விசேட அம்சம் என்னவெனில் உங்கள் ஸ்மார்ட் போனின் Lock Screen இல் இருந்தவாறே குறிப்புக்களை எடுக்கவும் புகைப்படங்களை எடுத்து அவற்றுக்கான குறிப்புக்களை உள்ளிட்டுக் கொள்ளவும் முடியும்.

Android parchi


இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ஒருவரின் தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள், இணைய முகவரிகள், நீங்கள் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்வுகள், செய்ய வேண்டிய கருமங்கள் என எந்த ஒன்றையும் Lock Screen இல் இருந்தவாறே குறித்துக் கொள்ள முடியும்.

முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடிகின்ற இந்த செயலி மூலம் நீங்கள் எடுக்கும் குறிப்புக்களுக்கு வெவ்வேறு வர்ணங்களை இட்டுக்கொள்ளவும், மிக முக்கியமான குறிப்புக்களை Favorite எனும் பகுதி மூலமாக  தனியாக அடையாலப்படுத்திக் கொள்ளவும் முடியும்.


தொடர்புடைய இடுகை:மேலும் இந்த செயலி மூலம் நீங்கள் எடுக்கக்கூடிய குறிப்புக்களை, இதில் தரப்பட்டுள்ள Hash Tag வசதி மூலம் வெவ்வேறாக வகைப்படுத்திக் கொள்ள முடிவதுடன் தேவைப்படும் போது குறிப்பிட்ட Hash Tag ஐ பயன்படுத்தி அவற்றை விரைவாக தேடிப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

மைக்ரோசாப்ட் Parchi செயலி


மேலும் நீங்கள் எடுக்கக்கூடிய குறிப்புக்களில் தொலைபேசி இலக்கங்கள் இருப்பின் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தை சுட்டுவதன் மூலம் உடனடியாக அழைப்பை ஏற்படுத்திக் கொள்ளவோ அல்லது அவற்றை Contact இல் சேமித்துக் கொள்ளவோ முடிவதுடன், குறிப்புக்களில் உள்ள மின்னஞ்சல் முகவரியை சுட்டும் போது குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மினஞ்சல் செய்யும் வசதி தோன்றும் அதேவேளை  இணைய இணைப்புக்களை சுட்டும் போது குறிப்பிட்ட தளத்துக்கு பிரவேசிப்பதற்கான வசதியும் தோன்றுகிறது.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரக்கூடிய இந்த செயலியை நீங்களும் தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.இந்த செயலியை உங்கள் நாட்டில் இருந்து தரவிறக்க முடியாவிட்டால் APK Pure எனும் இணையதளத்தை பயன்படுத்தி தரவிறக்கிக் கொள்ளலாம்.


தொடர்புடைய இடுகை:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top