புகைப்படங்களின் நீளம் மற்றும் அகலங்கள் பிக்சல் (Pixel) எனும் பெருமானத்தால் அளவிடப்படுகிறது.

புகைப்பட பிக்சல் அளவு அதிகரிக்க இலவச கணினி மென்பொருள்


எனவே குறைந்த பிக்சல்களை கொண்ட ஒரு புகைப்படத்தை பெரிய திரைகளை கொண்ட சாதனங்கள் மூலம் பார்க்கும் போது அவைகள் தெளிவற்றதாக காணப்படுகின்றது.


மேலும் குறிப்பிட்ட புகைப்படத்தை பெரிய விளம்பரப் பலகைகளுக்கு அச்சிடும் போதும் குறிப்பிட்ட புகைப்படங்கள் அதிக பிக்சல்களை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும்.

இந்த செயற்பாட்டை போட்டோஷாப் மென்பொருள் மூலம் மேற்கொள்ள முடிந்தாலும் அதற்கு போட்டோஷாப் மென்பொருளில் சற்று பரீட்சயம் இருக்க வேண்டும்.

எனினும் கணினியை பயன்படுத்தும் எந்த ஒருவராலும் குறைந்த பிக்சல்களில் அமைந்த புகைப்படங்களின் அளவை மிக இலகுவாக அதிகரித்துக் கொள்ள உதவுகிறது ReShade எனும் விண்டோஸ் கணினிகளுக்கான  இலவச மென்பொருள்.


தொடர்புடைய இடுகை:

இதனை பயன்படுத்துவது எப்படி?

1. இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள File ===> Open எனும் பகுதியின் ஊடாக பிக்சல்களின் செறிவை அதிகரித்துக் கொள்ள விரும்பும் புகைப்படத்தை இந்த மென்பொருளில் உள்ளிட்டுக் கொள்ள வேண்டும்.


ReShade இலவச கணினி மென்பொருள்

2. பின்னர் குறிப்பிட்ட புகைப்படத்தை நீங்கள் எத்தனை பிக்சல் அளவில் நீங்கள் பெற விரும்புகிறீர்களோ அந்த அளவை தெரிவு செய்ய வேண்டும்.

3. இனி குறிப்பிட்ட புகைப்படத்தின் தெளிவை மேலும் அதிகரித்துக் கொள்ள Denoise, Texture, Control, Accuracy போன்ற வசதிகளும் தரப்பட்டுள்ளது. தேவைப்படின் இவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள Batch Processing எனும் பகுதியின் ஊடாக ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களின் அளவுகளை ஒரே நேரத்தில் அதிகரித்துக் கொள்ளவும் முடிகிறது.

நீங்களும் இதனை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

2 comments:

 1. தாங்கள் தரும் விளக்கம்
  மிகவும் பயணுள்ளதாக இருக்கிறது நன்றி
  உங்களுடைய. பணி தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...!
   புதுமைகள் படைக்கவுள்ளோம் தொடர்ந்தும் இணைந்திருங்கள்....! :)

   நீக்கு

 
Top