புதுப்புது கோணங்களில் தனது சாதனங்களை உலகுக்கு அறிமுகப்படுத்த சாம்சங் நிறுவனம் தயங்குவதே இல்லை.

கேலக்ஸி-வியுவ்


அந்தவகையில் 18.4 அங்குல பிரமாண்டமான திரையை கொண்ட சாம்சங் "கேலக்ஸி வியுவ்" எனும் டேப்லெட் சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம்.

ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது  1.6GHz வேகத்தில் இயங்கக்கூடிய Octa-core Processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது.

அத்துடன்  2GB RAM மற்றும் 32/64GB போன்ற உள்ளக நினைவகங்களை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD Card ஐ பயன்படுத்தி மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

சாம்சங்-கேலக்ஸி-வியுவ்-டேப்லெட்


மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள Battery ஆனது 5700 mAh வலுவை கொண்டுள்ளதால் இதனை நீண்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.இவைக தவிர 275.8 மில்லிமீட்டர் நீளம் 451.8 மில்லிமீட்டர் அகலம் போன்றவற்றுடன் 11.9 மில்லிமீட்டர் தடிப்பையும் கொண்டுள்ள இதன் நிறை 2.65 கிலோகிராம்கள் ஆகும்.

மேலும் 4G வலையமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வசதியுடன் WiFi, Bluetooth 4.1 போன்ற பொதுவான வசதிகளையும் கொண்டுள்ள இதன் விலை தொடர்பான எதுவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை எனினும் இதன் விலை 599 அமெரிக்க டொலர்களாக அமையலாம் என எதிரபார்க்கப்படுகிறது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top