ஒப்போ நியோ 7 எனும் தனது புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ நியோ 7


5 அங்குல திரையை கொண்டுள்ள இது ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட "கலர் ஓ.எஸ் 2.1" எனும் இயங்குதளத்தை கொண்டு இயங்குகிறது. 


மேலும் 1.2GHz வேகத்தில் இயங்கக்கூடிய Quad-core Qualcomm Snapdragon 410 வகையில் அமைந்த Processor உடன் 1GB RAM ஐயும் இது கொண்டுள்ளது.

16 GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD Card ஐ பயன்படுத்தி 128 GB வரையில் அதிகரித்துக் கொள்ள முடியும்.

இவற்றுடன் 8 மெகா பிக்சல் தெளிவுத்திறனை கொண்ட பிரதான கேமராவையும் 5 மெகா பிக்சல் தெளிவுத்திறனில் அமைந்த முன்பக்க கேமராவையும் இது கொண்டுள்ளது.

142.7 மில்லிமீட்டர் நீளம் 71.7 மில்லிமீட்டர் அகலம் 7.55 மில்லிமீட்டர் தடிப்பு போன்றவற்றை கொண்டுள்ள இதன் எடை 141 கிராம் ஆகும்.

மேலும் இரண்டு SIM அட்டைகளை பயன்படுத்துவதற்கான வசதியை கொண்டுள்ள இது Wi-Fi, Bluetooth 4.0, micro-USB, மற்றும் GPS வசதிகளுடன் 4 G/3G ஆகிய இரு வேறு பதிப்புகளில் அறிமுகப்படுத்தபடுகிறது.

அக்டோபர் 28 ஆம் திகதி முதல் இந்திய சந்தைக்கு வரவுள்ள இதன் விலை தொடர்பான எதுவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இது நடுத்தர வசதிகளை கொண்டிருந்தாலும் 4GB RAM வசதியுடன் "ஒப்போ R7s"  எனும் ஸ்மார்ட் போனை ஒப்போ நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Sources: Oppo
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top