அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்படும் பேஸ்புக், கூகுள் பிளஸ் ஆகிய சமூக வலைதளங்களில் தற்போது அனிமேஷன் படங்களையும் பகிர்ந்துகொள்ள முடிகிறது.


அனிமேஷன் Giphy


இவ்வாறு உருவாக்கப்படக்கூடிய அனிமேஷன் படங்களானது ஒரு குறுகிய நேரத்தினுள் கருத்தாழம் மிக்கதொரு காட்சியையோ அல்லது வேடிக்கையான, சுவாரஷ்யமான, ஆச்சரியமான காட்சிகளையோ விபரிப்பதாக அமைவதால் பேஸ்புக், கூகுள் பிளஸ் ஆகிய சமூக வலைதளங்களில் அதிகமானவர்களின் வரவேற்பை பெற்றதாக அமைந்துள்ளது.


யூடியூப் தளத்தில் இருக்கக்கூடிய ஒரு வீடியோ காட்சியிலோ அல்லது ஏனைய இணையதளங்களிலோ அல்லது உங்கள் கணினியிலோ இருக்ககூடிய வீடியோ காட்சி ஒன்றின் ஒரு சுவாரஷ்யமான, நகைச்சுவையான அல்லது ஆச்சரியமான ஒரு பகுதியை அனிமேஷன் படங்களாக மாற்றி அமைத்துக் கொள்ள உதவுகிறது Giphy எனும் இணையதளம்.தொடர்புடைய இடுகை:


இந்த இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?


1. இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Browse என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் கணினியில் உள்ள ஒரு வீடியோ கோப்பை இந்த தளத்திற்கு தரவேற்றிக் கொள்ளலாம் அல்லது இணையதளங்களில் இருக்கக்கூடிய ஒரு வீடியோ கோப்பின் இணைய இணைப்பை இந்த தளத்தில் தரப்பட்டுள்ள கட்டத்தில் உள்ளிடுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பை இந்த தளத்திற்கு தரவேற்றி கொள்ளலாம்.

2. பின்னர் "Start Time" எனும் பகுதி மூலமாக குறிப்பிட்ட வீடியோ கோப்பில் அனிமேஷன் படமாக மாற்ற விரும்பும் காட்சியின் ஆரம்ப இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.

அனிமேஷன்


3. இனி "Start Time" என்பதற்குக் கீழே தரப்பட்டிருக்கும் Duration என்பதன் மூலம் குறிப்பிட்ட படம் எவ்வளவு நேரம் இயங்க வேண்டும் என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

4. பின் கீழே தரப்பட்டுள்ள Create Gif என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட அனிமேஷன் படம் உருவாக்கப்படும்.

பின்னர் தோன்றும் பக்கத்தில் Advanced என்பதை சுட்டுவதன் மூலம் அதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்வதற்கான Download Button ஐ பெற்றுக் கொள்ளலாம்.

அனிமேஷன் இணையதளம்.


பிறகு Download Button ஐ சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட அனிமேஷன் படத்தை உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.

அல்லது Advanced எனும் பகுதியின் மூலம் பெறப்படும் இணைய இணைப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட அனிமேஷன் படத்தை பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top