இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் அல்லவா?

எனவே நாளைய டிஜிட்டல் உலகுக்கு அவர்கள் தம்மை தற்பொழுதே தயார்படுத்திக் கொள்வதை அவர்கள் கைகையில் இன்றைய தொழில்நுட்ப சாதனங்களை கொடுத்தால் புரியும்.

Android Kids Place - Parental Control செயலி


இன்றைய தொழில்நுட்ப சாதனங்கள் மீது சிறுவர்கள் அதீத ஆர்வத்தை காட்டுகின்றனர். இது ஒரு வகையில் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தாலும் சில சந்தர்பங்களில் அது பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

உதாரணத்திற்கு: நாம் இணையத்தின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு எமது ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துகிறோம். எனவே எமது ஸ்மார்ட் போனை சிறுவர்கள் பயன்படுத்தும் போது அவர்கள் தவறுதலாக எமது நிதியியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புண்டு.

மேலும் அவர்கள் தவறான முறையில் இணையத்தை பயன்படுத்த வாய்ப்புக்களும் உண்டு.

இதன் மறுபக்கம் பார்க்கையில் சிறுவர்களின் அறிவு, திறன் விருத்திக்கு உதவும் இணையதளங்கள், செயலிகள் என ஏராளமனவைகளும் இருக்கவே செய்கின்றன.


தொடர்புடைய இடுகை;

எனவே சின்னஞ் சிறுசுகள் எமது ஸ்மார்ட் போனை தவறான முறையில் பயன்படுத்தாமல் குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள் அவர்களை நிர்வகிப்பதிற்கு உதவுகின்றது Kids Place எனும் Android சாதனங்களுக்கான செயலி.


இந்த செயலி மூலம் சிறுவர்களுக்கு என தனியான ஒரு பகுதியை உருவாக்கி அதில் அவர்கள் எவ்வாறான செயலிகளை பயன்படுத்த வேண்டும், எவ்வாறான வசதிகளை அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வரையறையை எம்மால் உருவாக்க முடியும்.

Kids அப்ளிகேஷன்


இந்த செயலியை நாம் திறந்த பின் எமக்கு என தனியானதொரு கடவுச் சொல்லை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதன் அமைப்புக்களுக்கான பகுதியின் மூலம் ஏராளமான வரையறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.


இதில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள  அமைப்புக்களுக்கான குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் கடவுச் சொல்லை உள்ளிட்டு உல் நுழைந்து கொள்க.


Kids Place - Parental செயலி


இனி திறக்கும் சாளரத்தில் Managed App எனும் பகுதியின் ஊடாக நீங்கள் சிறுவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கும் செயலிகளை மாத்திரம் தெரிவு செய்யலாம்.

இதன் போது செயலிகளுக்கு அருகில் தரப்பட்டிருக்கும் Wifi குறியீட்டை சுட்டுவதன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட செயலியின் மூலம் இணையத்தை பயன்படுத்துவதில் இருந்தும் தடுக்கலாம்.

Kids Place செயலி அமைப்பு


மேலும் Parental Control எனும் பகுதியின் மூலம் அவர்கள் இணையத்தை பயன்படுத்துவதில் இருந்தும் முற்றாக தடை செய்யலாம்.


Kids Place


அவர்களுக்கு என்ற தனியான பகுதியில் இருந்து வெளியேறாத படி Home Button ஐ பயன்படுத்த முடியாதவாறு அமைத்துக் கொள்ளலாம். அத்துடன் குறிப்பிட செயலி உங்கள் ஸ்மார்ட் போன் துவங்க ஆரம்பிக்கும் போதே துவங்கச் செய்யலாம்.

இவைகள் தவிர இந்த செயலியில் தரப்பட்டுள்ள Timer வசதி மூலம் அவர்கள் குறிப்பிட்ட ஸ்மார்ட் சாதனத்தை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அமைத்துக் கொள்ளலாம் குறிப்பிட்ட நேரம் முடிவடைந்த பின் உங்கள் ஸ்மார்ட் போன் தானாகவே Lock செய்யப்பட்டுவிடும். மீண்டும் சரியான கடவுச்சொல்லை உள்ளிட்டால் மாத்திரமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Kids Place - Parental Control


மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பல பயனர் கணக்குகளை உருவாக்கி அவர்கள் ஒவ்வொருவருக்கும் என தனித்தனியான வரையறைகளுடன் தனித்தனியான பகுதிகளை உருவாக்கிக் கொடுக்க முடியும். 


இவைகள் மாத்திரம் இன்றி இன்னும் ஏராளமான வசதிகளை இந்த செயலி மூலம் பெறமுடிகிறது.


குழந்தை செல்வங்கள் உள்ள அல்லது தம்பி தங்கைகள் உள்ள அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய இந்த செயலியை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top