HTC நிறுவனம் HTC One A9 எனும் தனது ஸ்மார்ட் போனை உத்தியோகபூவமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

HTC ஸ்மார்ட் போன்

கூகுளின் மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது "மார்ஷ்மல்லோ" இயங்குதளத்துடன் இயங்கக்கூடிய ஐபோன் என்று கூறும் அளவுக்கு ஐபோனின் வடிவமைப்பை ஒத்துக் காணப்படுகிறது.

இதன் Home Button மூலம் Fingerprint Sensor வசதியை பெற முடிகிறது.

5 அங்குல Full HD திரையை கொண்டுள்ள இது 1.5GHz வேகத்தில் இயங்கும் 64-bit octa-core Snapdragon 617 Processor ஐ தன்னகமாக கொண்டு இயங்குகிறது.

HTC மார்ஷ்மல்லோ


மேலும் 3GB RAM மற்றும் 32 GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD Card நினைவகத்தை பயன்படுத்தி 2 டெராபைட் வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

அத்துடன் சிறந்த செல்பி புகைப்படங்களை எடுப்பதற்கு ஏற்றவகையில் அமைந்த UltraPixel கேமராவை இது தனது முன் பக்கத்தில் கொண்டிருப்பதுடன் 13 மெகா பிக்சல் தெளிவுத்திறனை கொண்ட பிரதான கேமராவையும் தன்னகமாக கொண்டுள்ளது.

வாடிக்கையார்களின் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யும் வகையில் பல்வேறு வர்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இது 145.75 மில்லிமீட்டர் நீளம் 70.8. மில்லிமீட்டர் அகலம் 7.26 மில்லிமீட்டர் தடிப்பை கொண்டுள்ளது.


இதன் விலை 399 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 26000 இந்திய ரூபாய்கள் ஆகும்.

Sources: Techrum, HTC

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top