34 அங்குல வளைந்த திரையை கொண்ட தனது All In One எனும் கணினியை அறிமுகப்படுத்துகிறது HP நிறுவனம்.


 HP 34 அங்குல aLL In One கணினி


3440x1440 Pixel Resolution இல் அமைந்த விசாலமான தொடு திரையை கொண்டுள்ள இது விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அத்துடன்  HP Envy 34 all-in-one  என இது அழைக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யும் வகையில் 8 GB Ram மற்றும் 16 GB RAM ஆகிய நினைவகங்களை இது கொண்டுள்ளதுடன் 6th generation Skylake Core i5 Processor மற்றும் Core i7 ஆகிய தெரிவுகளையும் கொண்டுள்ளது.

அத்துடன் 128GB SSD அல்லது 2 டெரா பைட் வரையிலான ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.


HP Envy 34 அங்குல கணினி


எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் விற்பனைக்கு விடப்படவுள்ள இதன் விலை 1,800 அமெரிக்க டொலர்கள் முதல் ஆரம்பிக்கிறது.


இதனுடன் Envy 24 All-in-One மற்றும் Envy 27 All-in-One ஆகிய கணினிகளும் அறிமுகப்படுத்தப் படுகின்றன இவைகள் 24 அங்குல 27 அங்குல திரைகளை கொண்டுள்ளன இவற்றின் விலைகள் முறையே 1000 மற்றும் 1200 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top