கூகுள் குரோம் இணைய உலாவியானது (Web Browser) இன்று கணினிகள் ஊடாகவும் ஸ்மார்ட் சாதனங்கள் ஊடாகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கூகுள் குரோம்


அந்த வகையில் குறிப்பிட்ட இணைய உலாவியில் இனங்காணப்படும் குறைபாடுகளை அவ்வப்போது நிவர்த்தி செய்வதுடன் புதுப்புது வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம்.


இதனடிப்படையில் கூகுள் குரோம் இணைய உலாவியை வெறும் 16 எழுத்துக்களை கொண்டு நிலைகுலையச் செய்யும் ஒரு குறைபாட்டை நாம் எமது முன்னைய பதிவின் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

கூகுள் குரோம் இணைய உலாவியில் மேற்கண்ட குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் Mute Tab எனும் புதியதொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


பொதுவாக நாம் இணையத்தை உலா வருகையில் சில இணையதளங்களில் உள்ள வீடியோ கோப்புகள் தானாகவே இயங்கத் துவங்குவதால் அதில் இருந்து ஏற்படக்கூடிய சத்தம் எமக்கு இடைஞ்சல் தரக்கூடியதாக அமைந்துவிடும்.

இது போன்ற சந்தர்பங்களில் குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து வரும் சப்தத்தை நிறுத்திக் கொள்வதற்காகவே இந்த Mute Tab எனும் வசதி தரப்பட்டுள்ளது.


கூகுள் குரோம் Unmute Tab


இதற்கு குறிப்பிட்ட இணையதளம் திறக்கப்பட்டுள்ள தாவலை (Tab) Right Click செய்யும் போது பெறப்படும் சாளரத்தில் உள்ள Mute Tab என்பதை சுட்ட வேண்டும்.

இந்த வசதியானது கூகுள் குரோம் இணைய உலாவியின் v46 எனும் புதிய பதிப்பிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய இடுகை:


நீங்களும் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்துபவர் எனின் chrome://chrome/ என கூகுள் குரோம் இணைய உலாவியின் Address Bar இல் தட்டச்சு செய்வதன் மூலமோ அல்லது Menu பகுதியின் ஊடாக About Google Chrome என்பதை சுட்டுவதன் மூலமோ உங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியை புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்ளலாம்.


 Image Credit: Recomhub

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top