எமது கணினியில் உள்ள வீடியோ கோப்புக்கள் சில சந்தர்பங்களில் எமது ஸ்மார்ட் சாதனங்களில் இயங்காமல் இருக்கலாம், அதே போல் எமது கணினியில் பார்க்க முடிகின்ற சில புகைப்படங்களை எமது ஸ்மார்ட் சாதனங்களில் பார்க்க முடியாது போகலாம். இதன் போது குறிப்பிட்ட வீடியோ கோப்பின் அல்லது புகைப்படத்தின் வடிவத்தை இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றுவதன் மூலம் அதனை எமது ஸ்மார்ட் சாதனங்கள் மூலமாகவும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். Filewiggler Online File Converter இணையதளம்


அதே போல் பல் வேறு தேவைகளுக்காக குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை PDF, Microsoft Document போன்ற இன்னும் பல்வேறு வடிவங்களுக்கு மாற்ற வேண்டிய தேவைகளும் ஏற்படலாம்.

இவ்வாறான சந்தர்பங்களில் புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் போன்றவற்றை குறிப்பிட்ட ஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றி கொள்வதற்கு உதவுகின்றது Filewiggler எனும் இணையதளம்.

 

தொழில்நுட்ப சொற்கள்:
 • கோப்பு: File
 • கோப்பு வடிவம்: File Format 

 

இந்த தளத்தின் மூலம் புகைப்படங்கள் ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் என எந்த ஒன்றையும் குறிப்பிட்ட ஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மிக இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும்.


இதன் மூலம் MKV, MPEG2 Program, MPEG1, MP3, MP4, 3GP, AAC, AVC1, DivX / Xvid போன்ற இன்னும் ஏராளமான வடிவங்களில் அமைந்த எந்த ஒரு Audio மற்றும் வீடியோ கோப்புக்களையும் நீங்கள் விரும்பும் வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடிவதுடன் அவைகளைஉங்கள் Android, iOS, iPhone, iPod, iPad, Blackberry, PSP, Zen, Windows Phone 7, Zune போன்ற சாதனங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

அதே போல் நூற்றுக்கணக்கான புகைப்படங்களின் வடிவங்களுக்கும், ஆவணங்களின் வடிவங்களுக்கும் ஆதரவு அளிக்கும் இந்த தளத்தின் மூலம் நீங்கள் எந்த ஒரு புகைப்படம் அல்லது ஆவணத்தையும் நீங்கள் விரும்பும் வடிவத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும்.தொடர்புடைய இடுகைகள்:

இந்த தளத்தை பயன்படுத்துவது எவ்வாறு?

 • முதலில் இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு இலவச கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
 • இனி உங்கள் மின்னஞ்சல் கணக்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இணைப்பு ஒன்று உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
 • பின் அதனை சுட்டுவதன் மூலம் உங்கள் கணக்கை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
 • இனி குறிப்பட்ட தளத்தின் முகப்புப் பக்கத்தின் மூலம் நீங்கள் வடிவத்தை மாற்ற இருக்கும் கோப்பு எவ்வகையானது என்பதை தெரிவு செய்தல் வேண்டும்.
Filewiggler


உதாரணத்திற்கு நீங்கள் வடிவத்தை மாற்ற இருக்கும் கோப்பு ஒரு வீடியோ கோப்பு எனின் Media என்பதை தெரிவு செய்ய வேண்டும், அதே போல் புகைப்படம் எனின் Image என்பதையும், ஆவணங்கள் எனின் Documents என்பதையும் தெரிவு செய்தல் வேண்டும். (படம் இல: 01, 02, 03)

Filewiggler கோப்புக்களின் வடிவங்களை மாற்றல்

 • அடுத்து தோன்றும் சாளரத்தில் உள்ள File Upload என்பதற்குக் கீழ் இருக்கும் Brows Button ஊடாக உங்கள் கணினியில் இருந்து குறிப்பிட்ட கோப்பை (File) இந்த தளத்திற்கு தரவேற்றிக் கொள்ள முடியும். (படம் இல: 04)
 • நீங்கள் இணையத்தில் இருக்கும் கோப்பு ஒன்றை இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றி உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் அதன் இணைய இணைப்பை Enter URL என்பதில் Past செய்யலாம். (படம் இல: 05)
 • பின்னர் Nick Name என்பதில் நீங்கள் விரும்பினால் அந்த கோப்புக்கு பெயர் ஒன்றை வழங்கி Next என்பதை அலுத்துக. (படம் இல: 06)
Filewiggler கோப்புக்களின் வடிவங்களை மாற்றும் இணையம்

 • இனி தோன்றும் சாளரத்தின் மூலம் நீங்கள் குறிப்பிட்ட கோப்பை எந்த வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களோ அந்த வடிவத்தை தெரிவு செய்து மீண்டும் Next என்பதை அலுத்துக. (படம் இல: 07, 08)

Filewiggler தளம்

 • பின்னர் தோன்றும் சாளரத்தில் Go என்பதை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட கோப்பு நீங்கள் தெரிவு செய்த வடிவத்திற்கு மாற்றப்பட்டு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். (படம் இல: 09)

Filewiggler எனது கணக்கு

 • அல்லது குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள MY File என்பதின் ஊடாக அவற்றை தரவிறக்கிக் கொள்ள முடியும். (படம் இல: 10)

அவ்வளவு தான்.

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்குச் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.இந்த தளம் ஆதரவளிக்கக் கூடிய கோப்பு வடிவங்களை பின்வரும் இணைப்புகள் மூலம் காணலாம்.


இந்த தளத்தில் நீங்கள் தரவேற்றும் வீடியோ கோப்பு ஒன்றின்ஆகக் கூடுதலான அளவு 300 MB களாக இருக்க முடியும்.

இந்த தளத்தில் நீங்கள் தரவேற்றும் புகைப்படம்அல்லது ஆவணம் ஒன்றின்ஆகக் கூடுதலான அளவு 10 MB களாக இருக்க முடியும்.

தொடர்புடைய இடுகை: 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top