இன்று எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும் ஒருவர் மரணிக்கும் நாள் மற்றும் நேரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள  முடிவதில்லை. ஒருவகையில் இது அனைவருக்கும் நல்லது தான்.

மரணிக்கும் திகதி


ஏனென்றால் சாகும் காலம் தெரிந்து விட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும் அல்லவா?

எது எப்படியோ சுவரஷ்யத்தை விரும்புபவர்களுக்கு தாம் இறக்கும் திகதி எப்பொழுது என்பதை அறிந்து கொள்ள பின்வரும் இணையதளங்கள் உதவுகின்றது.

இணையம்Deathdate எனும் இந்த இணைய தளமானது பார்பதற்கே சற்று பயங்கரமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உங்கள் பெயர், பிறந்த திகதி, உயரம், நிறை, பாலினம் போன்றவற்றை உள்ளிட்ட பின் கீழே தரப்பட்டுள்ள Calculate என்பதை சுட்டிய பின் இறக்கும் திகதி காண்பிக்கப்படும்.


Deathclock இணையதளம்இந்த தளமும் சற்று கரடு முரடாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்திலும் மேற்கூறப்பட்டது போன்ற தகவல்களை உள்ளிடுவதன் மூலம் மரணிக்கும் திகதி மற்றும் நேரத்தை அறியலாம்.


Deathtimer இணையம்இந்த தளத்தில் உங்கள் பெயர், பிறந்த திகதி போன்ற மேற்கூறிய தகவல்களுடன் உங்கள் நாட்டையும் குறிப்பிடுவதன் மூலம் மரணிக்கும் திகதி மற்றும் நேரத்தை அறிந்து கொள்ளலாம்.

இவைகள் தவிர பின்வரும் தளங்களும் மரணிக்கும் நேரத்தை கண்டறிய உதவுகின்றன.
இந்த தளங்கள் வெளிப்படுத்தப்படும் தகவல்கள் வெறும் கணிப்புக்கள் மாத்திரமே. எனவே சுவாரஷ்யத்துக்காக மாத்திரம் இந்த தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மரணம் என்பது ஆறிலும் வரலாம் நூறிலும் வரலாம்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top