HI






தமது அன்றாட பாவனைக்காக ஒரு மொபைல் சாதனத்தை தெரிவு செய்யும் போது இன்று அதிகமானவர்களின் பார்வை ஆண்ட்ராய்டு சாதனங்கள் பக்கமே திரும்பியுள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகள்


அந்த வகையில் ஸ்மார்ட் போன் என்றாலே ஆண்ட்ராய்டு போன் தான் எனும் அளவுக்கு தன் பக்கம் அதிக பயனர்களை ஆண்ட்ராய்டு கவர்ந்து வைத்திருப்பதற்கு, அதற்கென வழங்கப்படும் இலட்சக்கணக்கான  செயலிகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.


எனவே எமது எந்த ஒரு தேவைக்கும், ஏன் நாம் கற்பனையே செய்து வைத்திராத ஒரு தேவைக்கும் கூட கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store) இல் இருந்து செயலிகளை தரவிறக்கிக் கொள்ள முடியும்.

விடயம் என்னவெனில், நாம் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகளை தரவிறக்க முற்படும் போது அதனை எம்மால் தரவிறக்க முடியாத படி பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுவதுண்டு.

உதாரணத்திற்கு குறிப்பிட்ட செயலியை உங்கள் நாட்டில் இருந்து தரவிறக்க முடியாதபடி அது அமைக்கப்பட்டிருக்கலாம் அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு போனின் நினைவகத்தில் போதிய அளவு இடம் இல்லாது போனால் அவற்றை தரவிறக்க முடியாமல் போகலாம்.


எனவே இது போன்ற பல்வேறு சந்தர்பங்களிலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகளை எம்மால் தரவிறக்க முடியாமல் போவதுண்டு.

இது போன்ற சந்தர்பங்களில் எம்க்கு உதவுகிறது APK Pure எனும் இணையதளம்.


கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கக் கூடிய எந்த ஒரு செயலியையும் இந்த தளத்தின் ஊடாக சொற்ப நேரத்திலேயே தரவிறக்கிக் கொள்ள முடியும்.

எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.


ஏ பி கே புவர் இணையதளம்

எவ்வித கணக்குகளையும் துவங்க வேண்டிய அவசியமும் இல்லை நீங்கள் தரவிறக்க வேண்டிய செயலியின் "கூகுள் ப்ளே ஸ்டோருக்கான இணைய இணைப்பை உள்ளிட்டு Search Button ஐ அழுத்தினால் போதும். குறிப்பிட்ட செயலியை தரவிறக்கிக் கொள்வதற்கான இணைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பிறகென்ன குறிப்பிட்ட இணைப்பை சுட்டுவதன் மூலம் அந்த செயலியை தரவிறக்கிக் கொள்ள முடியும்.

Search Bar இல் உங்களுக்குத் தேவையான செயலியின் பெயரை தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் குறிப்பிட்ட செயலியை தேடிப்பெற்று தரவிறக்கிக் கொள்ள முடியும்.

கணினி மூலம் மாத்திரம் அல்லாது மொபைல் சாதனங்களுக்கும் ஆதரவளிக்கக் கூடிய இந்த தளத்திற்கு நீங்களும் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.





மேலும் இந்த தளத்தில் தரப்பட்டுள்ள மென்பொருள் மூலம் எந்த ஒரு செயலியையும் கணினியில் இருந்தவரே உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்துக்கு நிறுவிக்கொள்ளவும் முடியும்.


இது பற்றி அறிய கீழுள்ள பதிவை பார்க்க:





Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top