யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோ பாடல்களை அல்லது ஏனைய வீடியோ கோப்புக்களை Mp3 வடிவில் தரவிறக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா?

video to mp3

அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது Theyoump3 எனும் இணையதளம்.


யூடியூப் தளத்தில் இருக்கக் கூடிய எந்த ஒரு வீடியோ கோப்பையும் மிக விரைவாகவும், தொளிவாகவும் Mp3 வடிவத்திற்கு மாற்றிக் கொள்ள உதவும் இந்த இணையதளத்தை இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.இந்த இணையதளத்தை நாம் ஏன் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்?

  • இந்த தளத்தை பயன்படுத்துபவர்கள் எவ்வித கணக்குகளையும் துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

  • இந்த தளத்தின் மூலம் எவ்வித வரையறையும் இன்றி எத்தனை வீடியோ கோப்புக்களை வேண்டுமானாலும் Mp3 வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடிகிறது.

  • நீங்கள் Mp3 வடிவத்திற்கு மாற்றும் வீடியோ கோப்புக்கள் ஆகக்கூடிய நீளம் இவ்வளவாகத் தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் கிடையாது.


  • எந்த ஒரு தரப்பினராலும் இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளது.தொடர்புடைய இடுகை:இந்த தளத்தை பயன்படுத்துவது எவ்வாறு?

1. கீழே தரப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி உங்கள் கணினி மூலமோ அல்லது மொபைல் சாதனம் மூலமோ குறிப்பிட்ட தளத்துக்கு செல்க.2. இனி குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள கட்டத்தில் நீங்கள் Mp3 வடிவத்திற்கு மாற்ற விரும்பும் வீடியோ கோப்பின் இணைய முகவரியை (URL) Past செய்க.

3. பின்னர் Convert என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பு Mp3 வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிடும்.4. பிறகு தோன்றும் Download என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட Mp3 கோப்பை தரவிறக்கிக் கொள்ளலாம்.

அவ்வளவுதான்..!

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல பின்வரும் இணைப்பை சுட்டுக.
தொடர்புடைய இடுகை: Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top