உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளை இயங்க விடாமல் தடை செய்ய வேண்டுமா?

bLOCK ANDROID APPLICATIONS

அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது Clear Lock  எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி
உங்கள் ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டுள்ள எந்த ஒரு செயலியையும் 10 நிமிடங்கள் முதல் 12 மணித்தியாலங்கள் வரை இயங்க முடியாதவாறு அமைத்துக்கொள்ள முடியும்.

எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை எந்த ஒருவராலும் மிகா இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


Clear lock


இந்த செயலியை திறந்த பின் உங்கள் ஸ்மாட் போனில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து செயலிகளும் பட்டியல் படுத்தப்படும்.

அவற்றுள் நீங்கள் இயங்க விடாமல் தடை செய்ய வேண்டிய செயலிகளை தெரிவு செய்த பின் குறிப்பிட்ட செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள Button ஐ அழுத்த வேண்டும்.

clear lock application time setting


இனி தோன்றும் சாளரத்தின் மூலமாக குறிப்பிட்ட செயலியை எவ்வளவு நேரத்திற்கு இயங்க முடியாதவாறு தடை செய்ய வேண்டுமோ அந்த கால அளைவை தெரிவு செய்த பின் Block Apps என்பதை அழுத்துவதன் மூலம் அவைகள் குறிப்பிட்ட நேர முடிவு வரை இயங்க முடியாதவாறு தடை செய்து கொள்ளலாம்.

பல்வேறு சந்தர்பங்களிலும் பயன்படக்கூடிய இந்த செயலியை நீங்களும் தரவிறக்கிக் கொள்ளா பின்வரும் இணைப்பை சுட்டுக.Love to hear what you think!

3 comments:

 
Top