புகைப்படங்களை பிடிப்பதற்கும் வீடியோ கோப்புக்களை பதிவு செய்வதற்கும் என எமது ஸ்மார்ட் சாதனங்களில் தரப்பட்டுள்ள "கேமரா" செயலியையே இன்று அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

360 Camera ஆண்ட்ராய்டு ஐபோன் செயலி


எனினும் இதற்கென மூன்றாம் நபர் செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் எமது ஸ்மார்ட் சாதனத்தை பயன்படுத்தி மிகவும் சிறந்த புகைப்படங்களை பிடிக்க முடியும்.

அந்த வகையில் இதற்கென சிறந்த வசதிகளை தரக்கூடிய ஒரு இலவச செயலியே 360 Camera எனும் செயலியுமாகும்.


இந்த செயலியை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விளைவுகளை ஏற்படுத்தி புகைப்படங்களை பிடிக்க முடிவதுடன் பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.
இந்த செயலியை பயன்படுத்தி புகைப்படங்களை பிடிக்கும் போது திரையின் எந்த ஒரு பகுதியை சுட்டுவதன் மூலமும் புகைப்படங்களை பிடிக்க முடிவதுடன் புகைப்படங்களை பிடிக்கும் போது ஏற்படும் சப்தத்தையும் முடக்கிக் கொள்வதற்கான வசதிகள் இதன் அமைப்புக்கான பகுதியில் தரப்பட்டுள்ளது.மேலும் இந்த செயலியின் Explore எனும் பகுதியின் ஊடாக கேமராவை பயன்படுத்தி இன்னும் பல்வேறு வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இதன்  Explore பகுதியின் மூலம் பெறப்படும் Poster Camera என்பதன் மூலம் உங்கள் புகைப்படத்தை ஒரு ஓவியர் வரைவது போன்றும் கட்டிடங்களில் தெரிவதை போன்றும், காட்சிப்பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது போன்றும், சஞ்சிகைகளின் அட்டை படங்களில் வந்திருப்பது போன்றும் என பல சுவாரஷ்யமான வசதிகளையும் பெற முடிகிறது.அத்துடன் சிறந்த செல்பி புகைப்படங்களை எடுப்பதற்கான செல்பி கேமரா வர்ணங்களை மாற்றி எடுப்பதற்கான Color-Shift Camera, மற்றும் Bar Code குறியீடுகளை வாசிப்பதற்கான QR Code Scanner, சத்தத்துடன் கூடிய புகைப்படங்களை எடுப்பதற்கான Audio Camera என இன்னும் ஏராளமான வசதிகளை இந்த செயலியின் மூலம் பெற முடிகிறது.


தொடர்புடைய இடுகை: இவற்றுடன் நீங்கள் பிடித்த புகைப்படங்களை மேலும் அழகு படுத்திக் கொள்வதற்கு என பல ஏராளமான வசதிகளை தரக்கூடிய Photo Editor ஐயும் இது கொண்டுள்ளது.

இவைகள் தவிர நீங்கள் பிடிக்கும் புகைப்படங்களை இந்த செயலியின் ஊடாகவே பார்பதற்கான Album வசதி அவற்றை இணையத்தில் சேமிப்பதற்கான இணைய சேமிப்பாக வசதி போண்டவற்றையும் இதன் மூலம் பெற முடிகிறது.

நாம் ஏன் இந்த செயலியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்?

  • இது உலகளாவிய ரீதியில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • Google Play Store மற்றும் App store போன்றவற்றில் பயனர்களின் சிறந்த கருத்துக்களை பெற்றுள்ளதுடன் சிறந்த நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.
  • இலவசமானது தொல்லை தரும் வகையில் விளம்பரங்கள் காட்சிபடுத்தப்படுவதில்லை.

ஸ்மார்ட் போன் பயன்படுத்தக்கூடிய அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும்.

நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.தொடர்புடைய இடுகை: 

Love to hear what you think!

1 comments:

 
Top