இன்றைய ஸ்மார்ட் போன்களானது வெறும் அழைப்புக்களை மேற்கொள்வதற்கும், குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும் மாத்திரம் அல்லாது ஆரம்பத்தில் நாம் கணினி மூலம் மேற்கொண்ட செயற்பாடுகளையும் செய்து கொள்ள உதவுகிறது.

Clip Stack Clipboard Manager


அந்த வகையில் மைக்ரோசாப்ட் Office உட்பட நாம் கணினியில் பயன்படுத்திய ஏராளமான மென்பொருள்கள் ஸ்மார்ட் போன்களை நோக்கி நகர்ந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

எனவே நாம் எண்கள், எழுத்துகள், குறியீடுகள் என ஏராளமானவற்றை Copy செய்து அதனை இன்னும் ஒரு இடத்தில் Past செய்யும் செயற்பாடுகள் கணினியில் போலவே ஸ்மார்ட் சாதனங்களிலும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆகவே நாம் எமது ஸ்மார்ட் போன் மூலம் Copy செய்யக்கூடிய எந்த ஒன்றையும் சேமித்து அவற்றை பிறிதொரு சந்தர்பத்தில் பார்பதற்கும் அல்லது ஏனைய செயலிகளில் அவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கும் என அருமையான வசதிகளை தருகிறது Clip Stack எனும் Android சாதனத்துக்கான செயலி.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் கிளிப்போர்ட் மேனேஜர்


நீங்கள் உங்கள் Android சாதனத்தில் Copy செய்யக்கூடிய எத்தனை சொற்களையும் இது சேமித்து வைக்கிறது. அத்துடன் இது தமிழ் சொற்களுக்கும் ஆதரவளிக்கின்றமை இன்னும் இனிப்பான ஒரு விடயம் அல்லவா?


தொடர்புடைய இடுகை:


அவ்வாறு நீங்கள் Copy செய்த சொற்களில் உங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தவைகளை நட்சத்திர அடையாளம் இட்டு (Favorites) வேறாக சேமித்து வைத்துக் கொள்ளவும் இதில் வசதி தரப்பட்டுள்ளது.
 

இதன் அமைப்புக்களுக்கான பகுதி மூலம் இந்த செயலியின் செயற்பாட்டை முடக்கிக் கொள்ளவும் Floating Bubble ஐ தோன்றச் செய்யவும் Notification வசதியை செயற்படுத்திக் கொள்ளவும் முடியும்.

 

Android கிளிப்போர்ட் மேனேஜர்

 

Floating Bubble

  • இதில் Floating Bubble வசதியை செயற்படுத்துவதன் மூலம் உங்கள் Android சாதனத்தின் திரையில் Clip Stack செயலிக்கான சிறியதொரு அடையாளம் தோன்றும்.இதனை சுட்டும் போது தோன்றும் சிறிய இடைமுகத்தின் மூலம் உங்களுக்குத் தேவையான ஒன்றையும் Copy செய்து ஏனைய செயலிகளில் ஒன்றன் பின் ஒன்றாக Past செய்ய முடியும்.

மேலும் இந்த செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள கூட்டல் (+) அடையாளத்தை கொண்ட குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்களுக்குத் தேவையான சொற்களை இதில் தட்டச்சு செய்து சேமித்து வைக்கவும் அவற்றை ஏனைய செயலிகளில் Past செய்து பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

Notification

  • அத்துடன் Notification வசதியை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் இறுதியாக Copy செய்த 5 சொற்களை Notification பகுதியில் தோன்றச் செய்ய முடியும்.


Android ஸ்மார்ட் போன் கிளிப்போர்ட் மேனேஜர்


மேலும் Copy செய்த அனைத்தையும் Backup செய்து கொள்ளவும் சேமிக்கப்பட்டிருக்கும் சொற்கள் குறிப்பிட்ட ஒரு கால எல்லையில் தானாகவே நீங்கும் படி அமைத்துக் கொள்ளவும் இதில் வசதி தரப்பட்டுள்ளது.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரக்கூடிய இந்த செயலியானது மைக்ரோசாப்ட் Office, கூகுள் மொழிமாற்றி (Google Translate) போன்ற செயலிகளை அடிக்கடி பயன்படுத்துபவர்ககுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக அமையும்.
 

இந்த செயலியை நாம் ஏன் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

  • இந்த செயலியில் விளம்பரங்கள் எதுவும் இல்லை. இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
  •  எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளது.
  •  Play Store இல் 4.6 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

நீங்களும் இதனை தரவிறக்கிக் கொள்ள பின்வரும் இணைப்பை சுட்டுக.
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top