Xiaomi Mi 4c எனும் ஸ்மார்ட் போன் Xiaomi நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Xiaomi Mi 4c USB Type c

அதிவேகமாக தரவுகளை பரிமாற்றிக் கொள்வதற்கான Type-C எனும் வகையில் அமைந்த USB Port வகையை இது கொண்டுள்ளது.


Xiaomi ஸ்மார்ட் போன் Edge Tap


மேலும் இதில்  Edge Tap எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியானது குறிப்பிட்ட ஸ்மார்ட் போனின் ஒரு பக்கத்தை ஒரு முறை சுட்டுவதன் மூலம் கேமராவை பயன்படுத்த முடியுமான அதேவேளை இருமுறை சுட்டுவதன் மூலம் Back Button ஐ பயன்படுத்துவதற்கு ஈடாக இது செயற்படும்.

அத்துடன் திரையை தொடர்ச்சியாக இருமுறை தொடுவதன் மூலம் (Double Tap) குறிப்பிட்ட சாதனத்தை இயங்கும் நிலைக்கு கொண்டு வர முடியும்.


Xiaomi Mi ஸ்மார்ட் போன்


5 அங்குல FHD IPS திரையை கொண்டுள்ள இது  64-bit , Hexa-core Qualcomm Snapdragon 808 processor ஐயும் தன்னகமாக கொண்டுள்ளது.

மேலும் இந்த சாதனமானது கொண்டுள்ள நினைவகத்தின் அடிப்படையிலும், Ram இன் அடிப்படையிலும் இரு வேறு பதிப்புகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் ஒரு பதிப்பு 2 GB Ram உடன் 16 GB உள்ளக நினைவகத்தையும் மற்றைய பதிப்பு 3 GB Ram உடன் 32 GB நினைவகத்தையும் கொண்டுள்ளது.

அத்துடன் Autofocus, Led Flash வசதிகளுடன் கூடிய 13 மெகாபிக்சல் பிரதான கேமராவையும் 5 மெகாபிக்சல் தெளிவுத்திறன்னில் அமைந்த முன்பக்க கேமராவையும் இது கொண்டுள்ளது .

இது கொண்டுள்ள Infrared sensor வசதியின் மூலம் TV, DVR மற்றும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களை கட்டுப்படுத்த முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Xiaomi Mi 4c ஸ்மார்ட் போன் வர்ணம்


மேலும் இது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்து கொள்ளும் வகையில் கவர்சிகரமான பல வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

4G, Dual SIM வசதிகளை கொண்டுள்ள இதன் விலைகள் முறையே 1299 யென், மற்றும் 1499 யென்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய்களில் 13,370 மற்றும் 15,445 ரூபாய்கள் ஆகும்.


இது செப்டம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் சீனாவில் விற்பனைக்கு விடப்படவுள்ளது.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top