இணையத்தின் ஊடாக திரைப்படங்களை கண்டுகளிக்க உதவுகிறது Zero Dollar Movie எனும் இணையதளம்.


Zero Dollar Movie இணையதளம்.


இந்த தளத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள அனைத்து திரைப்படங்களும் யூடியூப் தளத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதுடன் அவைகள் சிறு பகுதிகளாக அல்லாமல் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை முழுமையாக இயங்கக் கூடியவைகளாக அமைந்துள்ளன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அமைந்த 15000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இந்த தளத்தின் மூலம் பார்க்க முடியும்.


அத்துடன் 1949 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அவைகள் திரைக்கு வந்த ஆண்டுகளின் அடிப்படையிலும் அவைகள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.

யூடியூப் இலவச திரைப்படம்


எனவே இந்த தளத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உங்களுக்குத் தேவையான மொழியில் அமைந்த திரைப்படங்களை மாத்திரம் வேறாக தேடிப்பெருவதற்கும் அவைகள் திரைக்கு வந்த ஆண்டின் அடிப்படையில் தேடிப்பெறவும் முடியும்.


தொடர்புடைய இடுகை:

அது மாத்திரம் அல்லாது இந்த தளத்தில் நீங்கள் விரும்பும் திரைப்படங்களை தேடிப்பெருவதற்காக Search செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும் அனைத்து திரைப்படங்களும் அதற்கான புகைப்படத்துடன் தரப்பட்டுள்ளதால் இந்த தளம் பார்ப்பவர்களுக்கு மிகவும் எளிமையான தோற்றத்தை வழங்குகிறது.

Zero Dollar Movie எனும் இந்த தளத்தில் தரப்ப்ட்டிருக்கக் கூடிய திரைப்படம் ஒன்றை சுட்டுவதன் மூலம் அது உடனடியாக இயங்க ஆரம்பித்து விடும். துரதிஷ்டவசமாக, அவற்றினை தரவிறக்குவதற்கான வசதி இந்த தளத்தில் வழங்கப்படவில்லை. இருப்பினும் உங்கள் கணினியில் Internet Download Manager அல்லது Freemake Video Downloader மென்பொருள்கள் நிருப்பட்டிருந்தால் அவற்றினை மிக இலகுவாக தரவிறக்கிக் கொள்ளவும் முடியும்.


தொடர்புடைய இடுகை: 

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top