உங்கள் கணினியுடன் USB Flash Drive சாதனங்கள் இணைக்கப்படும் போது அதனை கணினியின் Desktop இல் தோன்றச் செய்வதற்கும் அது தொடர்பான மேலதிக வசதிகளை பெற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது Desk Drive எனும் விண்டோஸ் கணினிகளுக்கான மென்பொருள்.


Desk Drive கணினி மென்பொருள்


இந்த மென்பொருளை இலவசமாகவே நிறுவி பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை நிறுவிய பின் உங்கள் கணினியுடன் USB Flash Drive சாதனங்கள் இணைக்கப்படும் போது அவைகள் கணினியின் Desktop பகுதியில் தோன்றும்.
இதன் மூலம் USB Flash Drive சாதனத்தில் உள்ள கோப்புக்களை Desktop இல் இருந்தவாரே மிக விரைவாக திறந்து கொள்ளவும் அதனை நிர்வகிக்கவும் முடியும்.


தொடர்புடைய இடுகை:இதில் USB Flash Drive சாதனம் மட்டுமல்லாது CD Rom, உங்கள் கணினியின் வன்தட்டு (Hard Disk) போன்றவைகளையும் Desktop இல் தோன்றச் செய்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.


USB Flash Drive மென்பொருள்


இவைகள் தவிர USB Flash Drive சாதனம் கணினியுடன் இணைக்கப்படும் போது File Explorer மூலமான அதிலுள்ள கோப்புகள் தானாக தோன்றும் வகையிலும், உங்கள் கணினியில் திறக்கப்பட்டுள்ள கோப்புறைகள் மற்றும் மென்பொருள்கள் போன்றன Minimize செய்யப்படும் வகையிலும் அமைத்துக் கொள்ளலாம்.

மேலும் Desktop இல் தோன்றக்கூடிய USB Flash Drive சாதனத்தை மிக விரைவாக இனங்கண்டு கொள்ளும் வகையில் குறிப்பிட்ட டிரைவ் iCon ஐ சுற்றி ஒரு வட்ட அடையாளம் ஏற்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

தொடர்புடைய இடுகை: 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top