எதையும் சற்று வித்தியாசமாக செய்ய விரும்புபவர்களுக்கு Alcomra எனும் Android ஸ்மார்ட் போன்களுக்கான செயலியானது விருந்தளிக்கக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.உங்களுக்கு விசில் அடிக்கத் தெரியுமா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை "OK Smile" என்றாவது சொல்ல முடியுமா? 


அப்படியானால் நீங்கள் விசில் அடிப்பதன் மூலமோ அல்லது நீங்கள் "OK Smile" என்று சொல்வதன் மூலமோ மிக இலகுவாக புகைப்படங்களை பிடிக்க உதவுகின்றது Alcomra எனும் Android சாதனத்துக்கான செயலி.


சுவாரஷ்யமான முறையில் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்கும் ஏனையவர்களின் உதவியின்றி 1 தொடக்கம் 15 மீட்டர் வரை அப்பால் இருந்து உங்களை நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக அமையும். (தரவிரக்க இனைப்பு கீலே வழங்கப்பட்டுள்ளது)


தொடர்புடைய இடுகை:


இந்த செயலியின் அமைப்புக்களுக்கான (Settings) பகுதி மூலம் இதனை உங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ள முடியும்.

Android Alcomra settings


இதன் அமைப்புக்களுக்கான பகுதியில் தரப்பட்டுள்ள Main camera Settings எனும் பகுதி மூலம் குறிப்பிட்ட செயலி மூலம் நீங்கள் புகைப்படங்களை பிடிக்கும் போது எவ்வித சத்தமும் தோன்றாத வகையில் அதிலிருந்து எழக்கூடிய சத்தத்தை முடக்கிக் கொள்ள முடியும். (Disable Shutter Sound)


Android whistles camera  அமைப்புக்கள்


அதே போல் மேற்குறிப்பிட்ட பகுதி மூலம் நீங்கள் பிடிக்கும் புகைப்படங்கள் எந்த அளவு தெளிவுத்திறன் கொண்டவைகளாக அமைய வேண்டும் என்பதையும் தெரிவு செய்ய முடியும்.


Android Remote camera


அதே போல் இந்த செயலியின் அமைப்புக்களுக்கான பகுதியில் தரப்பட்டுள்ள Remote Control எனும் பகுதி மூலம் நீங்கள் இடக்கூடிய கட்டளைகளில் எவ்வாறான கட்டளைகளுக்கு புகைப்படம் பிடிக்கப்பட வேண்டும் என்பதை அமைத்துக் கொள்ள முடியும்.

அதாவது நீங்கள் விசில் அடிக்கும் போது புகைப்படம் பிடிக்கப்பட வேண்டுமா? அல்லது குரல் கட்டளைகளை இடும் போது புகைப்படம் பிடிக்கப்பட வேண்டுமா? என்பதை தெரிவு செய்யலாம்.


Android whistles camera செயலி அமைப்புக்கள்


மேலும் குறிப்பிட்ட பகுதி மூலம் உங்களுக்கு வசதியான ஒரு குரல் கட்டளையை தெரிவு செய்ய முடியும் அதில் தரப்பட்டுள்ள "OK Cheese" அல்லது "OK Smile" எனும் குரல் கட்டளைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் எனினும் "Ok Photo", "Ok Action" , "Ok Start", "Ok Do it" போன்ற கட்டளைகளை பயன்படுத்த வேண்டும் எனின் குறிப்பிட்ட செயலியை கட்டணம் செலுத்தி பெற வேண்டும்.

என்றாலும் உங்களுக்கு "Ok Cheese", Ok Smile" எனும் கட்டளைகளே போதுமானது.

அத்துடன் நீங்கள் விசில் மூலமோ அல்லது குரல் மூலமோ கட்டளை இட்ட பின் உடனடியாக புகைப்படம் பிடிக்கப்பட வேண்டுமா? அல்லது சற்று தாமதித்து புகைப்படம் பிடிக்கப்பட வேண்டுமா? என்பதையும் உங்களது வசதிக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ள முடியும்.

அத்துடன் இதன் Setting பகுதில் தரப்பட்டுள்ள Activators என்பதன் மூலம் உங்கள் Android ஸ்மார்ட் போனின் Volume Key களை பயன்படுத்தி புகைப்படங்களை பிடிக்கவோ அல்லது அவற்றை உருப்பெருக்கிக் கொள்ளவோ (Zoom) முடியும்.


தொடர்புடைய இடுகை:

இவைகள் தவிர இன்னும் பல்வேறு வசதிகளையும் இந்த செயலி மூலம் பெற முடிகிறது.

நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
   

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top