நாம் பயன்படுத்தும் விண்டோஸ் கணினியை பல்வேறு விதங்களில்  Shutdown, Restart, Hibernate செய்ய முடிந்தாலும் விண்டோஸ் கணினியில் தரப்பட்டுள்ள Command Prompt மென்பொருளை பயன்படுத்தியும்  Shutdown, Restart, Hibernate செய்து கொள்ளலாம்.


கணினி Shutdown


இதன் மூலம் உங்கள் கணினியை உடனடியாக  Shutdown, Restart, Hibernate செய்து கொள்ள முடிவதுடன் குறிப்பிட்ட ஒரு நேர முடிவில்  Shutdown, Restart செய்யவும் குறிப்பிட்ட ஒரு நேர முடிவில் ஒரு செய்தியை தோன்றச் செய்தவாறு  Shutdown, Restart செய்து கொள்ளவும் முடியும்.Command Prompt மூலம் நீங்களும் உங்கள் கணினியை Shutdown, Restart, Hibernate செய்து கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.


முதலில் Command Prompt ஐ திறந்து கொள்க.

இதனை திறப்பதற்கு Start menu ஐ சுட்டும் போது தோன்றும் Search Bar இல் Command Prompt என தட்டச்சு செய்து தேடுவதன் மூலமோ அல்லது Win + R விசைகளை அழுத்தும் போது தோன்றும் Run Program இல் CMD என தட்டச்சு செய்வதன் மூலமோ திறந்துகொள்ள முடியும்.

விண்டோஸ் Command prompt மென்பொருள்

  • இனி உங்கள் கணினியை உடனடியாக Shutdown செய்வதற்கு பின்வரும் வரிகளை  Command Prompt இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக.

 shutdown -s


  • கணினியை உடனடியாக Restart செய்வதற்கு பின்வரும் வரிகளை Command Prompt இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக.

shutdown -r


  • கணினியை Log Off செய்வதற்கு பின்வரும் வரிகளை Command Prompt இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக.

shutdown -l


  • கணினியை Hibernate செய்வதற்கு பின்வரும் நிரல்களை Command Prompt இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக.

Rundll32.exe Powrprof.dll,SetSuspendState


தொடர்புடைய இடுகை:


  • ஒரு நிமிடத்தின் பின் உங்கள் கணினியை Shutdown செய்வதற்கு பின்வருமாறு நிரல்களை தட்டச்சு செய்க.

shutdown -s -t 60


  • ஒரு நிமிடத்தின் பின் உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும் எனின்...

shutdown -r -t 60

தொடர்புடைய இடுகை:மேலே தரப்பட்டுள்ள நிரல்களில் 60 என்பது 60 செக்கன்களை குறிக்கும் எனவே நீங்கள் உங்கள் கணினியை 5 நிமிடத்தின் பின் Shutdown அல்லது Restart செய்ய வேண்டும் எனின் 60 இற்கு பதிலாக 300 என்பதை தட்டச்சு செய்ய வேண்டும். (5*60 =300) 


  • குறிப்பிட்ட ஒரு நேரத்தின் பின் குறிப்பிட்ட ஒரு செய்தியை தோன்றச் செய்தவாறு உங்கள் கணினியை Shutdown செய்ய வேண்டும் எனின். நிரல்களை பின்வருமாறு தட்டச்சு செய்க.

shutdown -s  -t 150 -c "I am tired. I don't want to work anymore."


  • குறிப்பிட்ட ஒரு நேரத்தின் பின் குறிப்பிட்ட ஒரு செய்தியை தோன்றச் செய்தவாறு உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும் எனின். நிரல்களை பின்வருமாறு தட்டச்சு செய்க.

shutdown -r  -t 150 -c "I am tired. I don't want to work anymore."


மேற்குறிப்பிட்ட நிரல்களில் 150 செக்கன்களுக்கு பதிலாக உங்களுக்குத் தேவையான கால அளவையும்I am tired. I don't want to work anymore. எனும் செய்திக்கு பதிலாக நீங்கள் விரும்பும் செய்தியையும் உள்ளிட்டுக் கொள்ளலாம்.


மேலும் shutdown /a என்றோ அல்லது shutdown -a என்றோ தட்டச்சு செய்வதன் மூலம் நீங்கள் Shutdown செய்வதற்காக இட்ட கட்டளையை தடை செய்து கொள்ளவும் முடியும்.


குறிப்பு: மேற்குறிப்பிட்ட நிரல்களை தட்டச்சு செய்வதன் மூலம் உங்கள் கணினியை  Shutdown, Restart, Hibernate செய்து கொள்வதற்கு Command Prompt ஐ பயன்படுத்துவதற்கு பதிலாக Run Program ஐயும் பயன்படுத்தலாம்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

3 comments:

 
Top