பொதுவாக எமது கணினியுடன் USB Flas Drive சாதனங்களை இணைக்கும் போது USB சாதனங்களுக்காக இயங்குதளத்தில் தோன்ற வேண்டிய பொதுவான ஒரு iCon மூலமே USB சாதனங்களின் iCon தோன்றுகிறது.

ஆகவே தான் நாம் எந்த ஒரு USB Flash Drive சாதனத்தை எமது கணினியுடன் இணைக்கும் போதும் அனைத்திற்கும் ஒரு தோற்றத்தை கொண்ட Driver iCon கள் தோன்றுகின்றன.

விண்டோஸ் Explorer  இடைமுகம்.

எனினும் எமது USB Flash Drive சாதனத்தில் சிறியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நாம் விரும்பக்கூடிய எந்த ஒரு iCon ஐயும் எமது USB Flash Drive சாதனத்தின் iCon ஆக தோன்றச் செய்ய முடியும்.



நீங்களும் இதனை மேற்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

  • USB Flash Drive சாதனத்திற்கு iCon ஆக இட விரும்பும் ஒரு iCon ஐ தெரிவு செய்து கொள்க.


உங்களுக்குத் தேவையான iCon களை பின்வரும் இணைப்பில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.


அல்லது கூகுள் தேடியந்திரத்தில் USB drive icon என தேடுவதன் மூலம் நீங்கள் விரும்பும் iCon களை தரவிறக்கிக் கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:



புதிய ஆவணம் உருவாக்குதல்

  • பின் உங்கள் கணினியில் Right Click செய்து Text Document ஒன்றை உருவாக்கிக் கொள்க.
விண்டோஸ் Notped மென்பொருள்


இனி அதில் பின்வருமாறு தட்டச்சு செய்க.

[AutoRun]
label=My USB Drive
ICON=myusbdrive.ico

மேலுள்ள நிரலில் label என்பதற்கு அருகில் தரப்பட்டிருக்கும் My USB Drive என்பது உங்கள் USB Drive இன் பெயரை குறிக்கும். இதனை நீங்கள் விரும்பும் விதத்தில் வைத்துக்கொள்ளலாம்.

ICON என்பதற்கு நேரே தரப்பட்டிருக்கும் myusbdrive என்பது நீங்கள் iCon ஆக இட விரும்பும் கோப்பின் பெயராகும்.

விண்டோஸ் Save As சாளரம்

  • இனி குறிப்பிட்ட Notepad இன் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள File ===> Save As என்பதை சுட்டுவதன் மூலம் பெறப்படும் சாளரத்தில் File Name என்பதில் autorun.inf எனவும் Save as type என்பதில் All Files என்பதையும் தெரிவு செய்து அதனை உங்கள் கணினியில் சேமித்துக் கொள்க.

TIT Desktop

  • பின் மேற்கூறப்பட்ட முறையில் நீங்கள் தரவிறக்கிக் கொண்ட iCon இற்கு  myusbdrive என பெயரிடுக.
drag and drop


  • இனி குறிப்பிட்ட iCon ஐயும் நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய autorun.inf கோப்பையும் உங்கள் USB Flash Drive சாதனத்தில் இட்டுக்கொள்க.


அவ்வளவு தான்.

இனி நீங்கள் உங்கள் USB Drive சாதனத்தை கணினியுடன் இணைக்கும் போது நீங்கள் தெரிவு செய்த iCon உங்கள் USB சாதனத்தின் iCon ஆக தோன்றுவதை அவதானிக்கலாம்.


  • உங்கள் கணினியில் இருக்கக்கூடிய எந்த ஒரு புகைப்படத்தையும் Image Converter அல்லது Photoshop போன்ற Photo Editing மென்பொருள்களை பயன்படுத்தி iCon வடிவிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
  • மேற்கூறப்பட்ட முறையில் நீங்கள் USB Flash Drive சாதனத்துக்கு இடக்கூடிய இரு கோப்புக்களையும் Right Click செய்து Properties செல்வதன் ஊடாக Hide என்பதை Tick செய்வதன் மூலம் அவைகள் கண்களுக்கு புலப்படாத வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் iCon ஆக இட விரும்பும் Image ஆனது கட்டாயமாக .icon வடிவில் அமைந்திருத்தல் வேண்டும். இதனை அறிந்து கொள்ள குறிப்பட்ட Image ஐ right Click செய்வதன் மூலம் பார்க்க முடியும்.


பதிவு தொடர்பான சந்தேகங்கள், உங்கள் கருத்துக்கள் போன்றவற்றை கீழுள்ள கருத்துப் பேட்டியின் மூலம் குறிப்பிடுங்கள்.



தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top