பேர்லின் நகரில் இடம்பெற்று வரும் IFA நிகழ்வில் ஏராளமான தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


அந்த வகையில் இந்நிகழ்வில் சோனி அறிமுகப்படுத்திய Sony Xperia Z5 தொடர்பான தகவல்களை எமது முன்னைய பதிவின் மூலம் வழங்கி இருந்தோம்.

Moto 360 கடிகாரம்


குறிப்பிட்ட நிகழ்வில் Motorola நிறுவனம் தனது Moto 360 எனும் இரண்டாம் தலைமுறை Smart Watch ஐயும் அறிமுகப்படுத்தி உள்ளது.


இரு வேறு பதிப்புக்களாக அறிமுகப்படுத்தப்படும் இது ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் என இரு வேறு பதிப்புக்களை கொண்டுள்ளது. இதில் ஒன்று 42 மில்லிமீட்டர் அளவிலும் மற்றும் ஒன்று 46 மில்லிமீட்டர் அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஆண்களுக்கான Smart Watch ஆனது இரு வேறு அளவுகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் பெண்களுக்கான Smart Watch ஆனது 42 மில்லிமீட்டர் அளவில் மாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


  • இவைகள் கூகுளின் Android Wear 1.3 எனும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

  • 1.2GHz வேகத்தில் இயங்கக்கூடிய Snapdragon 400 Processor ஐ கொண்டுள்ள இவைகள் 512MB RAM மற்றும் 4GB உள்ளக நினைவகங்களை கொண்டுள்ளன.

  • இவற்றின் தடிப்பு 11.4 மில்லிமீட்டர்கள் ஆகும்.

  • கம்பி இணைப்பு அற்ற நிலையிலும் மின்னேற்றிக் கொள்ள முடியுமான இவைகள் Wifi, Heart rate monitor போன்ற வசதிகளையும் கொண்டுள்ளன.

  • இவற்றின் விலைகள் முறையே 300 அமெரிக்க டொலர்களாகவும் 430 அமெரிக்க டொலர்களாகவும் குறிக்கப்பட்டுள்ளது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top