இன்று இணையத்தை வலம் வருவதற்கு அதிகமானவர்கள் தமது ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே தற்பொழுது ஸ்மார்ட் சாதனங்களுக்கான இணைய உலாவிகளும் அடிக்கடி புதுப்புது வசதிகளுடன் அறிமுகப்படுத்தப் படுகிறது.

ஒபேரா மினி இணைய உலாவி

அந்த வகையில் பல புதிய வசதிகளுடன் Android சாதனங்களுக்கான ஒபேரா மினி இணைய உலாவியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஒபேரா மினி இணைய உலாவியானது குறைந்த வேகத்தை கொண்ட இணைய இணைப்பிலும் சிறப்பாக செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணையப் பாவனையை சிக்கனப்படுத்த விரும்புபவர்களுக்கு இந்த இணைய உலாவி மிகவும் பயனுள்ளதாக அமையும்.


இந்த இணைய உலாவியின் புதிய பதிப்பில் High Mode மற்றும் Extreme Mode என இரு வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.


ஒபேரா மினி இணைய உலாவி மொபைல்


இதில் Extreme Mode எனும் வசதி செயற்படுத்தப்பட்டிருக்கும் போது இணைய தளங்களின் அடிப்படை தோற்றமே காண்பிக்கப்படும் இதன் மூலம் 90 சதவீதம் வரையில் தரவுப்பாவனையை சேமித்துக் கொள்ள முடியும்.

மேற்கூறிய Extreme Mode எனும் வசதி ஏற்கனவே முன்னைய பதிப்புக்களில் பயன்பாட்டில் இருந்து வந்தாலும் High Mode எனும் வசதியானது புதிய பதிப்பிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Android தமிழ் ஒபேரா மினி


High Mode எனும் இந்த புதிய வசதியின் மூலம் இணையப் பக்கங்களை அதன் அசல் தோற்றத்திலேயே பார்க்க முடிவதுடன் இந்த வசதி செயற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் 50 சதவீதம் வரையிலான இணையப்பாவனையை சேமித்துக் கொள்ள முடியும்.
\
அத்துடன் Extreme Mode வசதி செயற்படுத்தப்பட்டிருக்கும் போது இயங்க மறுக்கும் இணையதளங்களை High Mode செயற்படுத்தப்பட்டிருக்கும் போது உலாவர முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள Android சாதனங்களுக்கான இந்த இணைய உலாவியானது குறைந்த வேக இணைய இணைப்புண் மூலம் இணையத்தை உலா வருபவர்களுக்கு கை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதன் புதிய பதிப்பை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக்கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Opera Mini For Android


தொடர்புடைய இடுகை:

Image Credit: Opera Blog

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top