அதிகமானவர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 6-எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் ஸ்மார்ட் போன்கள் Apple நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.


ஐபோன் 6 எஸ்-ப்ளஸ்

ஒவ்வொரு புதிய பதிப்பிலும் புதுப்புது வசதிகளை எதிர்பார்க்கும் பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஸ்மார்ட் போன்களும் பல புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.


Processor மற்றும் வேகம் 


ஐபோன் 6-எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் ஆகிய இரு ஸ்மார்ட் போன்களும் Apple A9 dual-core Processor ஐ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது முன்னைய பதிப்புக்களில் அறிமுகப்படுத்தப்பட்ட A8 Processor ஐ விட 70 மடங்கு வேகமாக இயங்குக்கூடியதாகும். மேலும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை Fingerprint scanner ஆனது முன்னைய ஐபோன் ஸ்மார்ட் சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட Fingerprint Scanner ஐ விட இரண்டு மடங்கு வேகமாக செயற்படக்கூடியதாகும்.


RAM மற்றும் உள்ளக நினைவகம்:

மேலும் ஐபோன் 6-எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் ஆகிய இரு ஸ்மார்ட் போன்களும் 2GB RAM ஐ கொண்டுள்ள அதே வேலை வாடிக்கையாளர்களின் தேவை விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தெரிவு செய்து கொள்ளும் படி 16GB, 64GB மற்றும் 128GB ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டுள்ளன.


கேமரா மற்றும் அதன் சிறப்பியல்புகள்:

அத்துடன் இதன் கேமராவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை Apple நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சிறந்த செல்பி புகைப்படங்களை எடுப்பதற்கும் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் 5 மெகாபிக்சல் தெளிவுத்திறனை இதன் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

இதன் முன்பக்க கேமரா மூலம் Panoramas முறையில் செல்பி புகைப்படங்களை எடுக்க முடிவதோடு முன்பக்க கேமரா மூலம் புகைப்படங்கள் பிடிக்கும் போது அதன் திரையில் இருந்து 3 மடங்கு ஒளியை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. (Screen Flash)

இதன் பிரதான கேமராவானது 12 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்டதாகும் இதன் மூலம் 3840 x 2160 Resolution இல் அமைந்த 4K வீடியோ கோப்புக்களை பதிவு செய்ய முடியும். முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் ஸ்மார்ட் போன்களானது 8 மெகாபிக்சல் தெளிவுத்திறனையே கொண்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் Live Photos எனும் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் புகைப்படங்களை ஒரு சில செக்கன்களுக்கு நகரும் வகையில் பிடிக்க முடியும். இதன் போது ஒலியையும் பதிவு செய்ய முடியும். வேறு வகையில் கூறுவதெனின் இது ஒரு சொற்ப நேர வீடியோ போன்று அமைந்திருக்கும்.

ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் 3டி டச்

திரை மற்றும் அதன் விசேட அம்சங்கள் 

ஐபோன் 6-எஸ் ஸ்மார்ட் போன் ஆனது 1334*750 Pixel Resolution இல் அமைந்த 4.7
அங்குல திரையை கொண்டுள்ள அதேவேளை  ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் ஸ்மார்ட் போன் ஆனது 1920*1080 Pixel Resolution இல் அமைந்த 5.5 அங்குல திரையை கொண்டுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் 3டி டச் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ஒரு செயலியை (அப்ளிகேஷன்) தொடர்ச்சியாக அழுத்தும் போது தோன்றும் சாளரத்தின் மூலம் அந்த செயலி மூலம் பெறக்கூடிய பல்வேறு பட்ட வசதிகளை குறிப்பிட்ட சாளரத்தில் இருந்தே பெற முடியும். உதாரணத்திற்கு நீங்கள்  ஐபோன் 6-எஸ் அல்லது ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் சாதனத்தில் தரப்பட்டுள்ள கேமராவை தொடர்ச்சியாக சுட்டும் போது தோன்றும் சாளரத்தின் மூலமாக வீடியோ கோப்புக்களை பதிவு செய்யவும், செல்பி புகைப்படங்களை எடுக்கவும், சாதாரண புகைப்படங்களை எடுக்கவும், Slow Motion வீடியோ கோப்புக்களை பதிவு செய்யவும் முடியும். இதன் போது Haptic feedback எனும் Vibrate வசதியும் தரப்பட்டுள்ளது.


இயங்குதளம்:

iOS 9 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய இவைகள் மேம்படுத்தப்பட்ட  Apple Map, Apple Pay, News, picture-in-picture video போன்ற இன்னும் பல செயலிகள் நிறுவப்பட்டதாக வெளியிடப்படுகின்றது.


வடிவமைப்பு:

மிகவும் வலிமையான உலோகத்தை (7000 series Aluminum) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இதன் சுற்றுப்புறமானது முன்னைய ஐபோன் 6 சாதனத்தில் ஏற்பட்ட வளையும்  (Bend) பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

ஐபோன் 6-எஸ் ஸ்மார்ட் போன் ஆனது 7.1 மில்லிமீட்டர் தடிப்பையும் 143 கிராம் எடையையும் கொண்டுள்ள அதே நேரம் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் ஸ்மார்ட் போனானது 7.3 மில்லிமீட்டர் தடிப்பையும் 192 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் விலை விவரங்கள்:

ஐபோன் 6 எஸ்: 649$ (16GB), 749$ (64GB), 849$ (128GB)

ஐபோன் 6 எஸ்-ப்ளஸ்: 749$ (16GB), 849$ (64GB), 949$ (128GB)


தொடர்புடைய இடுகை: 


பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் குறை நிறைகளையும் ஆவலுடன் எதிபார்கின்றோம்

Sources: Apple

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top