கணினி மூலம் எமது வெவ்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மென்பொருள்கள் இன்றி அமையாத ஒன்றாகும்.

கணினி மூலம் நாம் பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய வெவ்வேறுபட்ட கருமங்களுக்கும் வெவ்வேறுபட்ட மென்பொருள்கள் உள்ளன.


iObit Uninstaller 5 மென்பொருள்எனவே நாம் ஏராளமான மென்பொருள்களை எமது கணினியில் நிறுவி பயன்படுத்துவோம் அல்லவா?
அவ்வாறு நாம் நிறுவி இருக்கும் மென்பொருள்களுள் ஏராளமானவற்றை நாம் பயன்படுத்தாமலும் வைத்திருப்பதுண்டு. இதன் காரணாமாக எமது கணினியின் வன்தட்டு (Hard Disk) தேவையற்ற விதத்தில் நிரம்பி விடுவதுடன் அதுவே எமது கணினியின் மந்த கதியான செயற்பாட்டுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது.

எனவே எமது கணினியின் வேகத்தை பேணுவதற்கும் வன்தட்டில் உள்ள நினைவகத்தை மீதப்படுத்திக் கொள்வதற்கும் எமது கணினியில் நாம் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தேவையற்ற மென்பொருள்களை நீக்கி விடுவது சிறந்த வழியாகும்.

இவ்வாறு நாம் பயன்படுத்தாமல் இருக்கும் மென்பொருள்களை நீக்கிக் கொள்வதற்கு என எமது விண்டோஸ் கணினியிலேயே வசதி தரப்பட்டிருந்தாலும் iObit Uninstaller எனும் இலவச மென்பொருளானது அருமையான பல வசதிகளை தருகின்றது.


மென்பொருள்களை நீக்கிக் கொள்வதற்காக எமது கணினியில் தரப்பட்டுள்ள வசதியை நாம் பயன்படுத்தினாலும் அதன் மூலம் நாம் மென்பொருள்களை நீக்கும் போது நீக்கப்படும் மென்பொருள்களின் Registry உள்ளீடுகள், மற்றும் ஏனைய கோப்புக்கள் எமது கணினியிலேயே விட்டு வைக்கப்படுகின்றது .எனினும் நாம் iObit Uninstaller மென்பொருளை பயன்படுத்தி தேவையற்ற மென்பொருள்களை நீக்கும் போது அவற்றினை முற்றிலுமாக நீக்கிக் கொள்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.


iObit Uninstaller இடைமுகம்

  • இதற்கு நீங்கள் iObit Uninstaller மென்பொருளின் மூலம் குறிப்பிட்ட ஒரு மென்பொருளை நீக்கியவுடன் தோன்றும் Powerful Scan என்பதை சுட்டுவதன் மூலம் நீக்கப்பட்ட மென்பொருளால் உங்கள் கணினியில் விட்டு வைக்கப்பட்டுள்ள தேவையற்ற கோப்புக்களையும், Registry உள்ளீடுகளையும் கண்டறிந்து நீக்கிக் கொள்ள முடியும். 

iObit Uninstaller இலவச மென்பொருள்


  • மேலும் இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்களை ஒரே நேரத்தில் தெரிவு செய்து நீக்கிக் கொள்ளவும் முடிகிறது. (படம் இல: 1)
  • மேலும் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்களை "அண்மையில் நிறுவப்பட்ட மென்பொருள்கள்", "கணினி வன்தட்டில் அதிக இடத்தை பிடித்திருக்கும் மென்பொருள்கள்", "அடிக்கடி பயன்படுத்தப்படாத மென்பொருள்கள்" என வேறு பிரித்து அறிந்து கொள்ள முடியும். இந்த வசதியானது தேவையற்ற மென்பொருள்களை மிக இலகுவாக இனங்கண்டு கொள்ள உதவுகின்றது. (படம் இல: 2)

iObit Uninstaller இலவச தரவிறக்கம்


  • அது மாத்திரம் இன்றி உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் இணைய உலாவிகளை ஆக்கிரமித்து இருக்கும் தேவையற்ற Toolbar மற்றும் ஏனைய நிரல்களையும் இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளவும் தேவையற்றவைகளை நீக்கிக் கொள்ளவும் முடியும். (படம் இல: 3) [அவ்வாறு பட்டியல் படுத்தப்படக்கூடிய Toolbar மற்றும் ஏனைய நிரல்கள் பாதுகாப்பானதா? அவைகள் எந்த அளவு நம்பத் தகுந்தவைகள் என்பதையும் கூட இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம். (படம் இல: 4) ]

மேலும் இதில் தரப்பட்டுள்ள Win Manager எனும் பகுதி மூலம் மேலும் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக்கொள்ள முடிகிறது.


iObit Uninstaller 5 பதிப்பு

  • விண்டோஸ் 8/8.1 மற்றும் விண்டோஸ் 10 கணினிகளில் நிறுவப்பட்டு வரக்கூடிய ஆனால் நீங்கள் பயன்படுத்தாத Universal App மென்பொருளை இந்த பகுதி மூலம் நீக்கிக்கொள்ள முடியும். (படம் இல: 5)

  • அத்துடன் Win Manager  என்பதில் Start up எனும் உப பகுதியின் மூலம் உங்கள் கணினி துவங்கும் போது அதனுடன் இணைந்தாற்போல் துவங்கும் மென்பொருள்களை கண்டறிய முடிவதுடன் அவற்றின் செயற்பாட்டை முடக்கிகொள்ளவோ அல்லது அவற்றினை கணினியில் இருந்து முற்றாக நீக்கிக் கொள்ளவோ முடியும்.

iObit Uninstaller வரலாற்றுத் தகவல்கள் இடைமுகம்


  • இவைகள் தவிர இதில் தரப்பட்டுள்ள Tools எனும் பகுதி மூலம் உங்கள் கணினியில் இருக்கக்கூடிய கோப்புக்களை Recovery செய்வதன் மூலம் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதவகையில் முற்றாகவே நீக்கிக் கொள்ள முடிவதுடன் உங்கள் கணினியில் இருந்து நீங்கள் நீக்கிய மென்பொருள்களின் விவரத்தை அறிந்து கொள்ளவும் முடியும். (படம் இல: 6)

  • இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளானது எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அதே வேலை Settings பகுதியின் ஊடாக இந்த மென்பொருளுக்கு இருவேறு தோற்றங்களை வழங்கவும் முடியும்.


iObit Uninstaller 5 எனும் இதன் புதிய பதிப்பானது விண்டோஸ் 10 இயங்குதளங்களுக்கும் ஆதரவு அளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பயனுள்ள மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download iObit Uninstaller 5


தொடர்புடைய இடுகை: கணினியில் இருந்து அழிக்க முடியாத கோப்புக்களை மிக இலகுவாக அழிக்க உதவும் இலவச கணினி மென்பொருள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top