HTC Desire 728 எனும் ஸ்மார்ட் போனை HTC நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.


2 டெராபைட் வரை இதன் நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள முடிகின்றமை இதன் விசேட அம்சமாகும்.


HTC Desire 728


1280 x 720 Resolution ஐ கொண்ட 5.5 அங்குல HD திரையை கொண்டுள்ள இது 1.3GHz வேகத்தில் இயங்கக்கூடிய Octa-core MediaTek MT6752 64-bit processor ஐ கொண்டுள்ளது.


மேலும்  2GB RAM மற்றும் 16GB உள்ளக நினைவகம் போன்றவற்றை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் இரண்டு Nano SIM களை பயன்படுத்துவதற்கான வசதி தரப்பட்டுள்ளது.


மேலும் இது செல்பி புகைப்படங்களை எடுப்பதற்கும் வீடியோ அழைப்புக்களை மேற் கொள்வதற்கும் ஏற்றவாறான 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவையும் தன்னகமாக கொண்டுள்ளது.

இவற்றுடன் 2800mAh வலுவுடைய Battery மற்றும் 4G LTE, WiFi, Bluetooth 4.1, GPS, FM Radio போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது.


Android 5.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது 7.87 மில்லிமீட்டர் தடிப்பையும் 153 கிராம் எடையையும் கொண்டதாகும்.

இதன் விலை 267 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 17750 இந்த ரூபாய்கள் ஆகும்.


Sources: htc

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top