சன் பிரான்சிஸ்கோ நகரில் இடம்பெற்றுவரும் கூகுளின் நிகழ்வில் கூகுள் தனது பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்தவகையில் கூகுள் அறிமுகப்படுத்தி இருந்த நெக்சஸ் 6P மற்றும் நெக்சஸ் 5X ஆகிய ஸ்மார்ட் போன்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே எமது முன்னைய பதிவு மூலம் குறிப்பிட்டிருந்தோம்.அதே போல் பிக்சல் சி எனும் Android டேப்லெட் சாதனம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.இது கூகுளின் புதிய Android மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.


2560 x 1800 Pixels Resolution ஐ கொண்டுள்ள இதன் திரையானது 10.2 அங்குலமாகும்.

மேலும் இது NVIDIA Tegra X1 with Maxwell GPU எனும் வகையில் அமைந்த Processor ஐ கொண்டுள்ளதுடன் 3 GB RAM ஐயும் தன்னகமாக கொண்டுள்ளது.

இவற்றுடன் 32 GB மற்றும் 64 GB ஆகிய நினைவகங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டேப்லெட் சாதனத்துடன் USB Type-C வகையில் அமைந்த Connector ஐ கொண்டுள்ளது. இது மிகவேகமாக மின்னேற்றிக் கொள்வதற்கும் மிகவேகமாக தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கும் துணை புரியக்கூடியதாகும்.

இவைகள் தவிர இதனுடன் ப்ளூடூத் வயர்லெஸ் Keyboard உம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


32GB டேப்லெட் சாதனத்தின் விலை 499 அமெரிக்க டொலர்களாகவும் 64 GB டேப்லெட் சாதனத்தின் விலை 599 அமெரிக்க டொலர்களாகவும் குறிக்கப்பட்டுள்ள அதேவேளை ப்ளூடூத் வயர்லெஸ் Keyboard இன் விலை 149 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top