HI






ஒவ்வொரு வருடமும் கூகுள் அறிமுகப்படுத்தி வரும் தனது ஸ்மார்ட் போனின் புதிய பதிப்பை இவ்வருடமும் அறிமுகப்படுத்தியுள்ளது.

நெக்சஸ் 5X மற்றும் நெக்சஸ் 6P ஆகிய ஸ்மார்ட் போன்களே தற்பொழுது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

நெக்சஸ் ஸ்மார்ட் போன்


இவ்விரு ஸ்மார்ட் போன்களும் Finger Print Sensor வசதியை கொண்டுள்ளன. அத்துடன் மிக வேகமாக மின்னேற்றிக் கொள்வதற்கும், வேகமான தரவுப் பரிமாற்றத்திற்கும் ஏற்ற வகையில் அமைந்த USB Type-C எனும் Port ஐ இவ்விரு சாதனங்களும் கொண்டுள்ளன.



Nexus 6P எனும் ஸ்மார்ட் போனானது Aeronautical-grade எனும் வகையில் அமைந்த அலுமினியத்தால் ஆன வெளிப்புறத்தை கொண்டுள்ளது.

12.3 MP மெகாபிக்சல் தெளிவுத்திறனில் அமைந்துள்ள இதன் கேமராவானது குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த புகைப்படங்களை பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 4K வீடியோ கோப்புக்களை பதிவு செய்ய முடியும். 


இவைகள் தவிர Nexus 6P ஸ்மார்ட் போனின் விபரக்குறிப்புகள் பின்வருமாறு.

  • 5.7 அங்குல WQHD AMOLED திரை.
  • DDR4 3 GB RAM.
  • Android 6 மார்ஷ்மல்லோ (Marshmallow) இயங்குதளம்.
  • உள்ளக நினைவகம் 32 GB, 64 GB மற்றும் 128 GB
  • 8 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய முன்பக்க கேமரா.
  • 2.0 GHz வேகத்தில் இயங்கக் கூடிய Qualcomm Snapdragon 810 octa-core 64-bit Processor
  • 3450 mAh Battery
  • 159.3 மில்லிமீட்டர் நீளம், 77.8 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 7.3 மில்லிமீட்டர் தடிப்பு.
  • 178 கிராம் எடை.
  • 4G LTE, WiFi, Bluetooth 4.2, NFC


 Nexus 5X ஸ்மார்ட் போனிலும் Nexes 6P ஸ்மார்ட் போனில் உள்ளவாறான 12.3 மெகா பிக்சல் கேமரா தரப்பட்டுள்ளது. எனினும் Nexus 5X இன் முன்பக்க கேமரா 5 மெகா பிக்சல் ஆகும்.

 Nexus 5X ஸ்மார்ட் போனின் ஏனைய விபரக்குறிப்புகள் பின்வருமாறு.

  • 5.2 அங்குல WQHD AMOLED திரை.
  • DDR3 2GB RAM
  • Android 6 மார்ஷ்மல்லோ (Marshmallow) இயங்குதளம்.
  • 16 GB மற்றும் 32 GB உள்ளக நினைவகம்.
  • 5 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய முன்பக்க கேமரா.
  • 1.8 GHz வேகத்தில் இயங்கக் கூடிய Qualcomm Snapdragon 808 hexa-core 64-bit Processor.
  • 3450 mAh Battery
  • 147 மில்லிமீட்டர் நீளம், 72.6 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 7.9 மில்லிமீட்டர் தடிப்பு.
  • 136 கிராம் எடை.
  • 4G LTE, WiFi, Bluetooth 4.2, NFC
அத்துடன் இந்த ஸ்மார்ட் போனை முன்பதிவு செய்து வாங்குபவர்களுக்கு 50 அமெரிக்க டொலர் பெறுமதியான Google Play Coupon வழங்கப்படுகின்றது. 

Nexus 6P ஸ்மார்ட் போனின் விலை 499 அமெரிக்க டொலர்கள் முதல் ஆரம்பிக்கிறது.

Nexus 5X ஸ்மார்ட் போனின் விலை 379 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் ஆரம்பிக்கிறது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top