குறிப்பிட்ட ஒரு விடயத்தை தெளிவாகவும், சுருக்கமாகவும் குறுஞ்செய்தி (SMS) மூலம் இன்னும் ஒருவருக்கு மிக விரைவாக தெரிவிக்க முடியும்.

ஸ்மார்ட் போன் குறுஞ்செய்தி


அந்த வகையில் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்கும் ஒருவருக்கொருவர் தமது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும் என பல்வேறு தேவைகளுக்காக நாம் குறுஞ்செய்தி வசதியை பயன்படுத்தி வருகின்றோம்.அந்த வகையில் எமது Android ஸ்மார்ட் போனில் நாம் இது வரை பெற்றுக் கொண்ட மற்றும் ஏனையவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் தொடர்பான சுவாரஷ்யமான புள்ளி விபரங்களை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள உதவுகின்றது TextStats எனும் Android சாதனத்துக்கான செயலி.


தொடர்புடைய இடுகை:

இந்த செயலி மூலம் எமது Android சாதனத்தில் இருக்கக் கூடிய குறுஞ்செய்திகள் தொடர்பான பின்வரும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.


TextStats அப்ளிகேஷன்

  • இது வரை உங்களுக்கு வந்துள்ள மொத்த குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை.
  • நீங்கள் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகளின் மொத்த எண்ணிக்கை.
  • அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் எண்ணிக்கை.
  • ஒரு குறுஞ்செய்தியில் இருக்கும் சராசரி சொற்கள்.
  • ஒரு சொல்லில் இருக்கும் சராசரி எழுத்துக்கள்.

Android SMS செயலி

  • ஒரு நாளில் எந்தெந்த நாட்களில் அதிகமான குறுஞ்செய்திகள் பெறப்பட்டுள்ளன/அனுப்பப்பட்டுள்ளன.
  • ஒரு வாரத்தில் எந்தெந்த நேரங்களில் அதிகமான குறுஞ்செய்திகள் பெறப்பட்டுள்ளன/அனுப்பப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு இலக்கங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள/பெறப்பட்டுள்ள மொத்த குறுஞ்செய்திகளின் எண்ணிக்கைகள்.

இது போன்ற தகவல்களை தெளிவாகவும் சுருக்கமாகவும் அறிந்து கொள்ளும் வகையில் அட்டவணைகளை கொண்டு மிக எளிமையாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் இதனை உங்கள் Android சாதனத்தில் நிறுவி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.Download Taxtstats For Android


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top