ஆரம்பத்தில் நாம் கணினி மென்பொருள்களை பயன்படுத்தி செய்த ஏராளமான செயற்பாடுகளை இன்று நேரடியாக இணையத்தின் ஊடாகவே செய்து கொள்ள இன்றைய இணையம் வழிவகுத்துள்ளது.


அனிமேஷன் எழுத்துக்கள்


அந்த வகையில் இணையத்தின் ஊடாக உங்கள் புகைப்படங்களை அழகு படுத்திக் கொள்வதற்கும், ஆவணங்களை தயாரித்துக் கொள்வதற்கும், கோப்புக்களை ஒரு வடிவத்தில் இருந்து இன்னும் ஒரு வடிவத்திற்கு மாற்றிக் கொள்வதற்கும் என ஏராளமான செயற்பாடுகளை இணையத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு நாம் பல்வேறு இணையதளங்களை எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போன்று இணையத்தின் ஊடாக அனிமேஷன் எழுத்துக்களை உருவாக்கி அவற்றினை கணினிக்கு தரவிறக்கிக் கொள்ளவும் பேஸ்புக், Google Plus போன்ற சமூக வலைதளங்களின் ஊடாக பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றது Bitshadow எனும் இணையதளம்.

இதனையும் பார்க்க: Google, Bing தேடியந்திரங்களின் ஊடாக அனிமேஷன் படங்களை தேடிப்பெறுவது எவ்வாறு?

குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் கணினியை பயன்படுத்தும் ஆரம்பப் பயனர்களாலும் கூட மிக இலகுவாக அனிமேஷன் விளைவுகளை ஏற்படுத்தும் எழுத்துக்களை கொண்ட படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்த தளத்தின் மூலம் அனிமேஷன் படங்களை உருவாக்கிக் கொள்வது எவ்வாறு?

  • அனிமேஷன் விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய சொற்களை இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Text எனும் இடத்தில் தட்டச்சு செய்த பின் அதற்குக் கீழே தரப்பட்டுள்ள Font எனும் பகுதியின் மூலம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அதன் எழுத்தின் அமைப்பினை மாற்றிக் கொள்ள முடியும்.
  • பின் Background எனும் பகுதியின் மூலம் குறிப்பிட்ட படத்திற்கான பின்புல நிறத்தினை தெரிவு செய்து கொள்ளவும் Frame Delay என்பதன் மூலம் குறிப்பிட்ட சொற்கள் அசைவுற வேண்டிய நேர இடைவெளியையும் தெரிவு செய்து கொள்ள முடியும்.
  • மேலும் Font Height எனும் பகுதி மூலம் குறிப்பிட்ட சொற்களின் எழுத்தின் அளவை மாற்றி அமைக்க முடியும்.
  • இறுதியாக நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தின் மேல் Right Click செய்து Save Image as.. என்பதன் மூலம் குறிப்பிட்ட அனிமேஷன் படத்தினை கணினியில் சேமித்துக் கொள்ள முடிவதுடன் GET URL என்பதை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட படத்திற்கான இணைய முகவரியை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Visit To Bitshadow


மேலும் இதனையும் பார்க்க: Facebook தளம் மூலம் அனிமேஷன் படங்களை பகிர்ந்து கொள்வது எவ்வாறு?Love to hear what you think!

1 comments:

 
Top