உங்கள் Android சாதனத்தில் உள்ள கேமரா மூலமாக அனிமேஷன் புகைப்படங்களை பிடிப்பதற்கும் அவற்றை பேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் பிளஸ் மற்றும் ஏனைய வழிகளில் உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் GifMe! எனும் Android சாதனத்துக்கான செயலி உதவுகின்றது.


GifMe! Android செயலி


நீங்கள் வீடியோவாக பதிவு செய்யும் எந்த ஒரு காட்சியையும் இந்த செயலி மூலம் அனிமேஷன் படங்களாக பிடிக்க முடியும்.உங்கள் Android சாதனத்தில் உள்ள இரு கேமராக்களையும் (back and Fron) பயன்படுத்தி அனிமேஷன் படங்களை எடுக்க முடிவதுடன் நீங்கள் எடுக்கக் கூடிய புகைப்படங்களுக்கு வெவ்வேறு வர்ணங்களில் அமைந்த தோற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் இதன் புதிய பதிப்பில் இன்னும் பல அருமையான வசதிகள் தரப்பட்டுள்ளன.

இந்த புதிய பதிப்பின் மூலம் உங்கள் Android சாதனத்தில் இருக்கும் எந்த ஒரு வீடியோ கோப்பையும் அனிமேஷன் புகைப்படங்களாக மாற்றிக்கொள்ள முடியும்.


GifMe! Android அப்ளிகேஷன்மேலும் உங்கள் Android சாதனத்தில் இருக்கக் கூடிய புகைப்படங்கள் பலவற்றை ஒன்றிணைத்து அவைகள் அனிமேஷன் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒரே புகைப்படமாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் அவைகள் ஒவ்வொன்றும் நகரும் வேகம், அவற்றின் வர்ணங்கள் போன்றவற்றையும் உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் உருவாக்கக் கூடிய அனிமேஷன் புகைப்படங்களுக்கு உங்கள் பெயரையோ அல்லது ஏனைய வாசகங்களையோ அழகிய எழுத்துருக்களிலும் பொருத்தமான வர்ணங்களிலும் உள்ளிட்டுக் கொள்ள முடிவதுடன் அவற்றுக்கு ஓட்டுக்களையும் (Stickers) சேர்த்து மேலும் அழகுபடுத்திக் கொள்ள முடியும்.


இவைகள் தவிர இன்னும் பல்வேறு வசதிகளையும் தரும் இந்த செயலியை நீங்களும் உங்கள் Android சாதனத்தில் நிறுவி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Love to hear what you think!

1 comments:

 
Top