நாம் ஏற்கனவே எமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல் வெறும் 50 அமெரிக்க டொலர்களுக்கு ஒரு டேப்லெட் சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது Amazon நிறுவனம். இது கிட்டத்தட்ட 3350 இந்திய ரூபாய்கள் ஆகும்.


Amazon Fire டேப்லட்


அதுமட்டுமல்லாது ஐந்து சாதனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு ஒன்று இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
Fire Tablet என அழைக்கப்படும் இந்த டேப்லட் சாதனமானது 1024 x 600 Pixel Resolution இல் அமைந்த 7 அங்குல திரையை கொண்டுள்ளது.

அத்துடன் 1.3 GHz வேகத்தில் இயங்கக் கூடிய Quad-core Possessor மற்றும் 1 GB Ram போன்றவற்றையும் இது கொண்டுள்ளது.

microSD Card ஐ பயன்படுத்தி 128 GB வரையில் அதிகரிக்க முடியுமான இதன் நினைவகமானது 8 GB ஆகும்.

இது 2 மெகாபிக்சல் தெளிவுத்திறன் உடைய இருபக்க கேமராக்களை (Front & Back) கொண்டுள்ளது.

இவைகள் தவிர Wi-Fi வலையமைப்புக்கு ஆதரவு அளிக்கக்கூடிய இது 191 மில்லிமீட்டர் நீளம், 115 மில்லிமீட்டர் அகலம், 10.6 மில்லிமீட்டர் தடிப்பு போன்றவற்றை கொண்டுள்ளது. அத்துடன் இதன் எடை 313 கிராம் ஆகும்.

இந்த டேப்லட்  சாதனத்துடன் 8 அங்குல "Fire HD 8" சாதனமும் 10 அங்குல "Fire HD 10" சாதனமும் சிறுவர்களுக்கான Fire Kids Edition எனும் டேப்லட் சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


Amazon தளத்தின் ஊடாக இவற்றுக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகி உள்ளன இவைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் வெளியிடப்பட உள்ளன.Love to hear what you think!

1 comments:

 
Top