இடம்பெற்றுக் கொண்டிருக்கும்  IFA நிகழ்வில் ஏராளமான தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.


Alcatel டேப்லெட்


அந்த வகையில் Alcatel நிறுவனம் தனது 17.3 அங்குல திரையை கொண்ட டேப்லெட் சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது.


ALCATEL ONETOUCH Xess என அழைக்கப்படும் இது 9.15 மில்லிமீட்டர் தடிப்பை மாத்திரமே கொண்டுள்ளதுடன் பல்வேறு கோணங்களில் நிறுத்தி வைப்பதற்கான Stand ஐயும் தன்னகமாக கொண்டுள்ளது.

பிரமாண்ட டேப்லெட்


கூகுளின் Android 5.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய இந்த சாதனமானது 1.5GHz வேகத்தில் அமைந்த Processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது.

microSD மூலம் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியுமான 32GB உள்ளக நினைவகம், 2GB RAM, போன்றவற்றை கொண்டுள்ள இது தொடர்ச்சியாக நீண்டநேரம் இயங்குவதற்கு ஏற்ற வகையிலான 10000mAh வலுவுடைய Battery ஐயும் கொண்டுள்ளது.இருப்பினும் இதன் விலை தொடர்பான எதுவித தகவலும் இது வரை வெளியிடப்படவில்லை.


Sources: Alcatel

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top