எமது ஸ்மார்ட் சாதனங்களில் இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்பதற்கும் அவற்றினை நிர்வகிப்பதற்கும் என எமது ஸ்மார்ட் சாதனத்தில் உள்ள Gallery அல்லது Photos எனும் வசதியை பயன்படுத்துவோம் அல்லவா?


Myroll


இருப்பினும் அவற்றிற்கு ஈடாக மூன்றாம் நபர் செயலிகளையும் பயன்படுத்திக் கொள்ள இன்றைய ஸ்மார்ட் சாதனங்கள் அனுமதிக்கின்றன.

அந்தவகையில் எமது Android மற்றும் iOS சாதனங்களில் உள்ள புகைப்படங்களை பார்பதற்கும் அவற்றினை நிர்வகிப்பதற்கும் என அருமையான பல வசதிகளை Myroll எனும் மூன்றாம் நபர் செயலியும் தருகின்றது.

myroll

  • உங்கள் Android சாதனத்தில் மறைந்து இருக்கும் உங்கள் விலைமதிப்பற்ற அனைத்து புகைப்படங்களையும் ஒரே பார்வையில் தொடர்ச்சியாக பார்பதற்கு வழிவகுக்கும் இந்த செயலியானது உங்களது புகைப்படங்கள் பிடிக்கப்பட்ட இடத்திற்கு ஏற்பவும் அவைகள் பிடிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்பவும் (Moments) என வெவ்வேறாக வகைப்படுத்தி தருகின்றது.

இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அல்லது நிகழ்வில் பெற்ற இனிய அனுபவத்தை மீட்டிப்பார்க்க முடியும்.


gallery


  • இந்த செயலியில் தரப்பட்டுள்ள Smart Mode எனும் வசதியானது நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி புகைப்படங்களை பார்க்கும் போது உங்கள் Android சாதனத்தில் உள்ள அழகிய புகைப்படங்களையும் சிரித்த முகங்களை கொண்ட புகைப்படங்களையும் தானாகவே இனங்கண்டு அவற்றினை பெரிதுபடுத்தி காட்டுகின்றது. எனவே இந்த செயலி மூலம் நீங்கள் உங்கள் Android சாதனத்தில் உள்ள புகைப்படங்களை பார்க்கும் போது சிறந்த அனுபவத்தை பெற முடியும்.

கேலரி பகிர்வு


  • மேலும் நீங்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பிடித்த புகைப்படங்களை அல்லது குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பிடித்த புகைப்படங்களை அல்லது குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் பிடித்த புகைப்படங்களை Moments எனும் பகுதியின் ஊடாக மிகவும் துல்லியமாக வகைப்படுத்தி தரும் இந்த செயலியானது அவற்றினை Slideshow முறையில் பார்பதற்கும் அவற்றுள் மிகவும் பிடித்தமானவைகளை Favorite எனும் பகுதியில் இணைத்துக் கொள்வதற்கும், அந்த புகைப்பட தொகுப்பை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சேவைகள் ஊடாக பகிர்ந்து கொள்வதற்கும், அவற்றினை ஏனையவர்களின் கண்களுக்குப் படாமல் மறைப்பதற்கும் என ஏராளமான வசதிகளை தருகின்றது.


Android மற்றும் iOS சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியுமான இந்த செயலியை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Myroll For Android

Download Myroll For iOS


தொடர்புடைய இடுகை: ஸ்மார்ட் சாதனத்தில் உள்ள தேவையற்ற புகைப்படங்களை மிக இலகுவாக கண்டறிந்து நீக்கிக் கொள்ள உதவும் செயலி

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top