ஸ்மார்ட் போன் சந்தைக்கு புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கும் Zaydo நிறுவனம் Zaydo Pulse எனும் தனது முதலாவது ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Zaydo Pulse முதல் ஸ்மார்ட் போன்


வெறும் 5.55 மில்லிமீட்டர் எனும் குறைந்த தடிப்பில் (Slim) வடிவமைக்கப்பட்டுள்ள இது 4 GB DDR4 RAM ஐ கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Zaydo Pulse ஸ்மார்ட் போனின் ஏனைய விபரக்குறிப்புகள் பின்வருமாறு.

 • 5.5 அங்குல திரை (Ultra Clear IPS)
 • DashOS எனும் இயங்குதளம் (இது Android 4.4 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது)
 • Qualcomm Snapdragon 810 Quad-Core Processor.
 • 32 GB மற்றும் 64 GB ஆகிய நினைவகங்கள்.
 • 13 மெகாபிக்சல் பிரதான கேமரா (Sony Exmor IMX214 BSI sensor)
 • 5 மெகாபிக்சல் முன் பக்க கேமரா.
 • 4G LTE வலையமைப்புக்களுக்கு ஆதரவு அளிக்கும் வசதி.
 • Bluetooth 4.0, WiFi போன்ற வசதிகள்.
 • 159 கிராம் எடை.
 • 154.1 மில்லிமீட்டர் நீளம் 76.5 மில்லிமீட்டர் அகலம்.
 • கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்.

ஸ்மார்ட் போன்


மேலும் இந்த ஸ்மார்ட் போன்களுக்கான Lollipop மேம்படுத்தலை Zaydo நிறுவனம் மிக விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

இதில் 32 GB பதிப்பு 320 அமெரிக்க டொலர்களாகவும் 64 GB பதிப்பு 370 அமெரிக்க டொலர்களாகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது. இது முறையே 21150 மற்றும் 24450 இந்திய ரூபாய்கள் ஆகும்.இதனை Zeydo இணையதளம் மூலமே கொள்வனவு செய்ய முடியும், இது எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top