நீங்கள் இன்னும் ஒரு நாட்டுக்கு பயணம் செய்ய இருக்கின்றீர்களா? அந்த நாட்டின் தொலை தொடர்பு வலையமைப்புக்கு உங்கள் மொபைல் போன் ஆதரவு அளிக்குமா?

அல்லது நீங்கள் உங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்ல மொபைல் சாதனங்களை வாங்கும் போது குறிப்பிட்ட மொபைல் சாதனம் உங்கள் நாட்டின் வலையமைப்புக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா?


willmyphonework இணையம்


அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது willmyphonework எனும் இணையதளம்.

இதுவரைக்கும் இந்த தளத்தில் 8685 மொபைல் சாதனங்களும் 837 தொலைதொடர்பு நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.  • இந்த தளத்தில் உங்கள் மொபைல் சாதனத்தை தயாரித்த நிறுவனத்தை தெரிவு செய்வதற்கான வசதி தரப்பட்டிருக்கும். அதன் மூலம் உங்கள் மொபைல் சாதனத்தை தயாரித்த நிறுவனத்தை தெரிவு செய்ய வேண்டும்.

  • பின்னர் தோன்றும் பகுதியில் உங்கள் மொபைல் சாதனத்தின் வகையையும் அதன் Model Number ஐயும் உள்ளிட வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் பயன்படுத்துவது சாம்சுங் மொபைல் சாதனம் எனின் அதன் வகை Samsung Galaxy Note 3 என வைத்துக் கொண்டால் அதன் Model Number ஆனது SM-900, SM-9000, SM-9000Q, SM-9002, SM-9005, SM-9006, SM-9007, SM-900J, SM-900A போன்ற வெவ்வேறு இலக்கங்களை கொண்டிருக்கும் அதில் சரியானதை இனங்கண்டு உள்ளிட வேண்டும். இதனை கண்டறிவது உங்களுக்கு சிரமமாக இருந்தால் அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதற்கான உதவிக் குறிப்புகளும் குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ளது. 

  • பிறகு குறிப்பிட்ட நாட்டையும் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தையும் தெரிவு செய்ய வேண்டும்.

அவ்வளவுதான்.


இனி உங்கள் மொபைல் சாதனம் குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் 2G, 3G, மற்றும் 4G ஆகிய வலையமைப்புகளுக்கு ஆதரவளிக்குமா? என்பதை அறிந்துகொள்ள முடியும்.


நீங்களும் குறிப்பிட்ட தளத்திற்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Visit To Willmyphonework


தொடர்புடைய இடுகை: நீங்கள் எதிர்பார்க்கும் வசதியுடன் மிகவும் பொருத்தமான ஸ்மார்ட் சாதனங்களை தெரிவு செய்து கொள்ள உதவும் இணையதளம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top