வெறும் 99 அமெரிக்க டொலர்களுக்கு Finger Print Sensor வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்துகின்றது UMi நிறுவனம். UMi  Fair என அழைக்கப்படும் இது கிட்டத்தட்ட 6550 இந்திய ரூபாய்கள் ஆகும்.

UMi  Fair போன்


இந்த ஸ்மார்ட் போனில் மிகவும் துல்லியமாக இயங்கக்கூடிய Finger Print வசதி தரப்பட்டுள்ளதுடன் வெவ்வேறான ஐந்து வகையில் அமைந்த Finger Print மாதிரிகளை இதில் சேமிக்க முடியும்.மேலும் இதில் தரப்பட்டுள்ள Finger Print Sensor ஆனது குறிப்பிட்ட ஸ்மார்ட் போனின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


5 அங்குல HD IPS திரையை கொண்டுள்ள இது 1GHz வேகத்தில் இயங்கக் கூடிய  quad-core MediaTek MT6735 Processor ஐ கொண்டுள்ளது.

UMi  Fair போன் வெள்ளை


1 GB RAM மற்றும் 8 GB நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD Card ஐ பயன்படுத்தி 64 GB வரையில் அதிகரித்த்துக் கொள்ள முடியும்.

மேலும் Led Flash வசதியுடன் கூடிய 13 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டுள்ள இதன் முன்பக்க கேமரா ஆனது 2 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்டதாகும்.


இவைகள் தவிர  4G LTE / 3G HSPA+, WiFi, Bluetooth 4.0, GPS போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது. இதன் Battery இன் திறன் 2000 mAh ஆகும்.


Sources: umidigi

Love to hear what you think!

1 comments:

 
Top