பேர்லின் நகரில் இடம்பெற்றுவரும் IFA நிகழ்வில் சோனி நிறுவனம் தனது முக்கிய மூன்று ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

Sony Xperia Z5 ஸ்மார்ட் போன்

Sony Xperia Z5, Sony Xperia Z5 Compact, மற்றும் Sony Xperia Z5 Premium எனும் ஸ்மார்ட் சாதனங்களே அவைகளாகும்.


இந்த மூன்று ஸ்மார்ட் போன்களும் 23 Megapixel தெளிவுத்திறன் உடைய கேமராவை கொண்டுள்ளன. இவைகள் கண் இமைக்கும் நேரத்தை விடவும் வேகமாக செயற்படக்கூடிய Autofocus வசதியை கொண்டுள்ள அதே வேலை 5X zoom வசதியையும் கொண்டதாகும்.அத்துடன் Sony Xperia Z5 Premium ஸ்மார்ட் போன் ஆனது உலகின் முதலாவது 4K திரையை கொண்ட ஸ்மார்ட் போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Processor

  • Sony Xperia Z5, Sony Xperia Z5 Compact, மற்றும் Sony Xperia Z5 Premium ஆகிய மூன்று ஸ்மார்ட் போன்களும் Qualcomm Snapdragon 810 வகையில் அமைந்த 64-bit Octa Core processor ஐ கொண்டுள்ளன.


RAM மற்றும் உள்ளக நினைவகம் 

  • இவற்றுள் Sony Xperia Z5 ஸ்மார்ட் போன் ஆனது 2GB RAM ஐ கொண்டிருக்கும் அதேவேலை  Sony Xperia Z5 Compact, மற்றும் Sony Xperia Z5 Premium ஆகிய ஸ்மார்ட் போன்கள் 3GB RAM நினைவகத்தை கொண்டுள்ளன. இந்த சாதனங்களின் நினைவகத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள விரும்புபவர்கள் misroSD ஐ பயன்படுத்தி 200GB வரையில் அதிகரித்துக் கொள்ள முடியும்.


திரை 

  • இதில் Sony Xperia Z5 ஆனது 4.6 அங்குல HD திரையையும், Sony Xperia Z5 Compact ஸ்மார்ட் போன் ஆனது 5.2 அங்குல FHD திரையையும், Sony Xperia Z5 Premium ஸ்மார்ட் போன் ஆனது 5.5 அங்குல 4K UHD திரையையும் கொண்டுள்ளன.


இயங்குதளம் 

  • இம்மூன்று சாதனங்களும் கூகுளின் Android 5.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அதேவேளை இம்மூன்று சாதனங்களும் 5MP தெளிவுத்திறன் உடைய முன் பக்க கேமராவை கொண்டுள்ளன.


ஏனைய வசதிகள் 

  • நீர் மற்றும் தூசு உட்புக முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இம்மூன்று ஸ்மார்ட் போன்களும் Fingerprint வசதியையும் கொண்டுள்ளன.

  • இவைகள் தவிர WiFi, Bluetooth 4.1, LTE (4G), NFC போன்ற பொதுவான வசதிகளையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் சாதனங்களானது எதிர்வரும் அக்டோபர் மாதம் உலாகலாவிய ரீதியில் விற்பனைக்கு வர உள்ளது. இருப்பினும் இதன் விலை தொடர்பான எதுவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Sources: Sony Mobile

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top