கணினிகளின் ஊடாகவும் ஸ்மார்ட் சாதனங்களின் ஊடாகவும் ஒருவருக்கு ஒருவர் முகம்பார்த்து கதைப்பதற்காக வழங்கப்படும் சேவைகளுள் ஸ்கைப் வழங்கும் சேவையும் மிகச்சிறந்த சேவையாகும்.


மொபைல் ஸ்கைப் குரூப் வீடியோ காலிங்


இணையத்தின் ஊடாக இலவச வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள இன்று ஏராளமான சேவைகள் இருந்தாலும் கூட ஸ்கைப் எனும் சேவையானது மிகவும் பழமையானதும், ஏராளமான பயனர்களை கொண்டதுமான ஒரு சேவையாகும்.


புதுப்பிக்கப்பட்டது: (14 - 1 - 2016)

இதன் சேவையில் 2006 ஆண்டிலேயே இலவச வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுவிட்டது. அந்தவகையில் ஸ்கைப் சேவையில் இலவச வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது 10 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.

இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் இதுவரை வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்காக 1 ட்ரில்லியன் நிமிடங்கள் (1,000,000,000,000) செலவளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு தசாப்த நிறைவையொட்டி ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் போன் போன்ற ஸ்மார்ட் சாதனங்கள் மூலமாகவும் குரூப் வீடியோ  காலிங்  செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்கைப் நிறுவனம். எனினும் இந்த வசதியை 2014 ஆம் ஆண்டில் கணினிகள் மூலம் பெற முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகமானவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருவதால் ஆசிரியர்கள், மாணவர்கள், உட்பட ஒவ்வொரு தனிநபருக்கும் இந்த வசதி பயனுள்ளதாக அமையும்.

இந்த வசதியை அடுத்துவரும் வாரங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வசதியை நீங்கள் விரைவில் பெற்றுக்கொள்ள விரும்பினால் http://10years.skype.com  எனும் இணையப்பக்கத்திற்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஏனைய தகவல்களை வழங்குவதன் மூலம் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான வசதியை விரைவில் பெற்றுக் கொள்ளலாம்.

_____________________________________________________________________


பின்வருவன ஸ்கைப் செயலியின் முன்னைய மேம்படுத்தலாகும்.

(4-9-2015 மேம்படுத்தல் ஸ்கைப் v6.0)

Android மற்றும் iOS ஸ்மாட் சாதனங்களுக்கான ஸ்கைப் செயலியின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

புதிய தோற்றம்.

  • வெளியிடப்பட்டுள்ள ஸ்கைப் v6.0 எனும் இந்த பதிப்பானது முன்னைய பதிப்பை விடவும் வேறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ளது.

புதிய Floating Button

  • மேலும் Android சாதனங்களுக்கான ஸ்கைப் செயலியில் Floating action button எனும் புதிய Button இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட செயலியின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள இந்த Button ஐ சுட்டுவதன் மூலம் புதியதொரு அழைப்பை, குரல் பதிவை, வீடியோ பதிவை அல்லது அரட்டை அடிப்பதற்கான வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

அழைப்பு இலக்கங்களை வேகமாக தேடிப்பெருவதற்கான மேம்படுத்தப்பட்ட வசதி  

  • மேலும் இதன் புதிய பதிப்பில் உங்களுக்கு மிகவும் முக்கியமான அழைப்பு இலக்கங்களை வேகமாக தேடிப் பெற்றுக் கொள்வதற்கான மேம்படுத்தப்பட்ட வசதி வழங்கப்பட்டுள்ளது.


செய்திகளை (Messages) பார்பதற்கான மேம்படுத்தப்பட்ட வசதி 

  • மேலும் உங்களுக்காக ஏனையவர்களிடம் இருந்து அனுப்பப்பட்டிருக்கும் செய்திகளில் எத்தனை செய்திகளை படித்துள்ளீர்கள் எத்தனை செய்திகள் இதுவரை படிக்கப்படாமல் இருக்கின்றது என்பதை விரைவாக அறிந்து கொள்வதற்கான வசதி இதன் புதிய பதிப்பில் தரப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்புகள் மூலம் இதன் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்ளலாம்.


Download Skype For Android

Download Skype For Windows Phone

Download Skype For iPhone

Download Skype For iPad

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top