Samsung Galaxy J2 ஸ்மார்ட் போன் இந்தியாவில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


 Samsung ஸ்மார்ட் போன்


8490 இந்திய ரூபாய்களாக விலை குறிக்கப்பட்டுள்ள இது எதிர்வரும் 21 ஆம் திகதி விற்பனைக்கு விடப்பட உள்ளது.

கருப்பு, வெள்ளை மற்றும் பொன் நிறங்களில் கிடைக்கக்கூடிய இது 60 x 540 Pixel Resolution இல் அமைந்த 4.7 அங்குல திரையை கொண்டுள்ளது.

Android 5.1.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய இது 1.3GHz வேகத்தில் இயங்கக் கூடிய Quad-core Exynos 3475 processor மற்றும் 1GB RAM போன்றவற்றை கொண்டுள்ளது.

மேலும் 8GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD Card ஐ பயன்படுத்தி மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

இவைகள் தவிர 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா 8 மெகாபிக்சல் பிரதான கேமரா போன்றவற்றுடன் 2000 mAh வலுவுடைய Battery ஐயும் தன்னகமாக கொண்டுள்ளது.


மேலும் இது 50 சதவீதம் வரை தரவுப்பாவனையை சேமித்துத் தரக்கூடிய Opera Max செயலி நிறுவப்பட்டதாக அறிமுகப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய இடுகை:


Sources: Sammobile 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top