எமது கணினியின் மூலம் ஏராளமான நாம் ஏராளமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம்  அல்லவா?

அவ்வாறு நாம் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேவைகளுக்கும் வெவ்வேறுபட்ட மென்பொருள்களை பயன்படுத்துவோம்.


Rollmyfile இணைய மென்பொருள்


அவ்வாறு நாம் வெவ்வேறு மென்பொருள்களை கொண்டு உருவாக்கக்கூடிய ஒவ்வொரு கோப்புக்களும் வெவ்வேறு வடிவங்களில் (File Format) அமைந்திருக்கும்.

உதாரணத்திற்கு நாம் மைக்ரோசாப்ட் Office மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கக்கூடிய ஆவணங்கள் .DOC, .DOCX, .XLS, .PPT போன்ற இன்னும் பல வடிவங்களில் சேமிக்கப்படும்.

அதேபோல் Photoshop, Photoscape அல்லது அது போன்ற ஏனைய புகைப்படங்களை வடிவமைக்கும் மென்பொருள்கள் மூலம் நாம் உருவாக்கக்கூடிய கோப்புக்களானது .JPEG, BMP, PNG, TIFF போன்ற இன்னும் பல வடிவங்களில் சேமிக்கப்படும்.

மேலும் நாம் கணினி மூலம் ஏதாவது ஒரு கோப்பு (File) ஒன்றை திறக்க வேண்டும் எனின் குறிப்பிட்ட கோப்பின் வடிவத்திற்கு ஆதரவளிக்கக் கூடிய மென்பொருள் எமது கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு PDF ஆவணங்களை திறக்க வேண்டும் எனின் உங்கள் கணினியில் அதற்கு ஆதரவு அளிக்கக்கூடிய Adobe Reader போன்ற மென்பொருள்கள் நிறுவப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் மைக்ரோசாப்ட் Office, Libra Office அல்லது Open Office போன்ற மென்பொருள்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்களை திறந்து கொள்ள அந்தந்த  மென்பொருள்கள் வேண்டும்

தொடர்புடைய இடுகை:


இருப்பினும் எவ்வித மென்பொருள்களின் உதவியும் இன்றி மேற்கூறப்பட்டது போன்ற 500 க்கும் மேற்பட்ட வடிவங்களில் அமைந்த கோப்புக்களை திறந்து கொள்ளவும் அவற்றை நிர்வகிக்கவும் உதவுகிறது Rollmyfile எனும் இணையதளம்.


இணைய மென்பொருள்.


குறிப்பிட்ட தளம் ஆதரவு அளிக்கக்கூடிய எந்த ஒரு கோப்பினையும் அந்த தளத்துக்கு தரவேற்றுவதன் மூலம் அதனை திறந்து கொள்ளவும் அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் (Edit) முடியும்.

எந்த ஒருவராலும் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் எமது கணினியில் இருக்கக்கூடிய கோப்புக்களை Drag & Drop செய்வதன் மூலமோ அல்லது குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள Choose File என்பதை சுட்டுவதன் மூலம் பெறப்படும் சாளரத்தின் ஊடாக குறிப்பிட்ட கோப்பை (File) தெரிவு செய்வதன் மூலமோ அவற்றினை இந்த தளத்துக்கு தரவேற்றிக் கொள்ள முடியும்.

அவ்வாறு தரவேற்றப்பட்ட பின் தோன்றும் Open File என்பதை சுட்டுவதன் மூலம் அதனை திறந்து பார்க்க முடியும்.

மேலும் அவ்வாறு திறக்கப்படும் கோப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும் முடியும் .உதாரணத்திற்கு நீங்கள் புகைப்படம் ஒன்றை குறிப்பிட்ட தளத்திற்கு தரவேற்றினால் அதனை திறந்து பார்க்க முடிவதுடன் அதில் எழுத்துக்களை இணைக்கவும் அதன் நிறத்தை மாற்றவும், Zoom, Rotate போன்ற செயற்பாடுகளை செய்யவும் முடியும்.

குறிப்பிட்ட தளத்தின் மூலம் புகைப்படங்கள், ஆவணங்கள், ZIP கோப்புக்கள், மின்நூல்கள் போன்ற எந்த ஒன்றையும் திறந்து கொள்ளவும் அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.

ஏதாவது ஒரு கோப்பை திறந்து கொள்ள உங்கள் கணினியில் மென்பொருள்கள் இல்லாத சந்தர்பத்தில் இந்த இணையதளம் உங்களுக்கு கை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
Love to hear what you think!

1 comments:

 
Top