சாதரணமாக  Android சாதனங்களில் தரப்பட்டுள்ள Lock Screen ஐ விட பல பயனுள்ள வசதிகளை தருகிறது Next எனும் Android சாதனங்களுக்கான Lock Screen செயலி.


Next Android Lock Screen அப்ளிகேஷன்


இந்த செயலியை உங்கள் Android சாதனத்தில் நிறுவிக்கொள்வதன் மூலம் பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் போன்ற மற்றும் ஏனைய செயலிகளில் தோன்றும் Notification கள், நீங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்திருக்கும் நிகழ்வுகள், தவறவிடப்பட அழைப்புக்கள் (Miss Call) போன்றவைகள் தொடர்பான அனைத்தையும் Next Lock Screen இல் இருந்தவாரே கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும். மேலும் நீங்கள் இசைகள், பாடல்களை கேட்பதற்காக பயன்படுத்தக்கூடிய Music Player ஐயும் Lock Screen மூலமே நிர்வகிக்கலாம்.

மைக்ரோசாப்ட் Android Next Lock Screen

இந்த செயலியின் ஊடாக Lock Screen இல் தோன்றக் கூடிய Nitification ஐ வலது புறம் நகர்த்துவதன் மூலம் அவற்றை அவற்றுக்கான செயலிகள் மூலம் திறந்து கொள்ளவும் இடது புறம் நகர்த்துவதன் மூலம் அவற்றை Lock Screen இல் இருந்து நீக்கிக் கொள்ளவும் முடியும்.


அது மட்டுமல்லாது இந்த செயலி மூலம் அன்றாடம் புதுப்புது பின்புலப்படங்களை Lock Screen இல் தானாகவே தோன்றும் வகையில் அமைத்துக் கொள்ளவும் முடியும்.தொடர்புடைய இடுகை: 


மேலும் உங்கள் Android சாதனத்தில் தரப்பட்டுள்ள Lock Screen இல் உள்ளிடும் கடவுச்சொல்லுக்கு பதிலாக இந்த செயலியில் தரப்பட்டுள்ள கடவுச்சொல் உள்ளிடும் வசதியானது உங்கள் Android சாதனத்துக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமையும்.தொடர்புடைய இடுகை:

மைக்ரோசாப்ட் Android Lock Screen


அது மாத்திரம் அல்லாது நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய செயலிகளை Lock Screen இல் இருந்தவாறே திறக்க முடியும்.

Lock Screen இல் உள்ள செயலிகளை ஒருமுறை சுட்டுவதன் மூலம் திறக்க வேண்டுமா? அல்லது இரண்டு முறை சுட்டுவதன் மூலம் திறக்கப்பட வேண்டுமா? என்பதை Settings பகுதியின் ஊடாக எமது வசதிக்கு ஏற்றாட் போல் அமைத்துக் கொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட வகையில் Lock screen தோன்றக் கூடிய செயலிகளை பிரதான மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்திக் கொள்ள முடியும்.

\
அதாவது நாம் அலுவல்களில் ஈடுபடும் போது Lock Screen இல் தோன்ற வேண்டிய செயலிகளை வேறாகவும், நாம் வீட்டில் இருக்கும் போது Lock Screen இல் தோன்ற வேண்டிய செயலிகளை வேறாகவும் நாம் பாதையில் செல்லும் போது பயன்படுத்தக்கூடிய செயலிகளை வேறாகவும் தோன்றச் செய்வதற்கான வசதி இதில் தரப்பட்டுள்ளது.


Next Lock Screen செயலி


இவைகள் தவிர Flash Light, Wi-Fi, Bluetooth போன்ற இன்னும் பல வசதிகளையும் Next Lock Screen இல் இருந்தவாரே இயக்கவும், முடக்கிக் கொள்ளவும் முடியும்.

அத்துடன் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் குறிப்பிடத்தகது.

தொடர்புடைய இடுகை:


உலகளாவிய ரீதியில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட Android பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியை நீங்களும் தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.


Sources: Microsoft-news

Love to hear what you think!

1 comments:

 
Top