கூகுளின் Android 5.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய Micromax Canvas Spark 2 எனும் ஸ்மார்ட் போனை வெறும் 3,999 இந்திய ரூபாய்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது Micromax நிறுவனம்.


இது 5 அங்குல FWVGA திரையை கொண்டுள்ளதுடன் 1.3GHz வேகத்தில் இயங்கக் கூடிய Quad-core Processor ஐயும் கொண்டுள்ளது.


அத்துடன் 4GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இத நினைவகத்தை 32 GB வரை அதிகரிக்க முடியும்.

இது 2 மெகாபிக்சல் தெளிவுத்திறன் உடைய முன்பக்க கேமராவை  கொண்டுள்ள அதே வேலை Led Flash வசதியுடன் கூடிய 5 மெகாபிக்சல் தெளிவுத்திறன் உடைய பிரதான கேமராவையும் கொண்டுள்ளது.

இவைகள் தவிர Dual SIM, 3G HSPA+, WiFi, Bluetooth 4.0 போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது.

Micromax Canvas Spark ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் 5 இலட்சம் வரையான ஸ்மார்ட் போன்கள் விற்பனையானதை அடுத்து Micromax Canvas Spark 2 ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக Micromax நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதனை எதிர்வரும் 30 திகதி முதல் Snapdeal தளத்தின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும். இதற்கான முன் பதிவுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றன.

Sources: Foneareana

Love to hear what you think!

1 comments:

  1. அருமையான விமரச்சனம்

    இடைடையே நிறுத்தம் இல்லாமல் இருந்தால் வாங்கலாம்

    (Intermediate hang of the device)

    பதிலளிநீக்கு

 
Top