ஒருவருடைய பேஸ்புக் கணக்கு என்பது அவரது தனிப்பட்ட தகவல்களை கொண்டதாக அமைந்துள்ளது. எனவே எமது பேஸ்புக் கணக்கினை இன்னும் ஒருவரால் பயன்படுத்த முடிந்தால் அது எமக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.
எனவே எவ்விதத்திலும் இன்னும் ஒருவருடைய முகநூல் (Facebook) கணக்கை திருட முடியாதவாறு முகநூல் தளமானது மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கூட எமது கவனயீனமான செயற்பாடுகளின் காரணமாக எமது முகநூல் கணக்கை ஏனையவர்களுக்கு பறி கொடுத்துவிடும் நிகழ்வுகளும் ஏற்படலாம்.பேஸ்புக் தளத்தை உலாவருவதற்கு அனைவரும் தமது தனிப்பட்ட கணினிகளை அல்லது மொபைல் சாதனங்களை பயன்படுத்தினாலும் கூட சில சந்தர்பங்களில் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துவதற்கு பொது இடங்களில் உள்ள கணினிகளையோ, அல்லது Internet Cafe போன்ற இடங்களையோ அல்லது நண்பர்களின் மொபைல் சாதனங்களையோ பயன்படுத்துவதும் உண்டு.

இவ்வாறு நாம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்திவிட்டு அறியாமை காரணமாகவோ அல்லது மறதியின் காரணமாகவோ குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கில் இருந்து நாம் வெளியேற (Logout) தவறிவிட்டால் குறிப்பிட்ட அதே சாதானத்தை பயன்படுத்தி பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவரால் உங்கள் கணக்கை பயன்படுத்த வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.


தொடர்புடைய இடுகை:


இது போன்ற இக்கட்டான நிலைமைகளில் சிக்கி இருப்பவர்களுக்கு பேஸ்புக் தளமே தீர்வை தருகிறது.


அதாவது பேஸ்புக் தளத்தின் மூலமாக நாம் எமது பேஸ்புக் கணக்கை பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் நாம் பயன்படுத்தக்கூடிய திகதி, நேரம், இயங்குதளம் ,சாதனம், இணைய உலாவி மற்றும் நாம் இருக்கக்கூடிய இடம் தொடர்பான அனைத்து தகவல்களும் பேஸ்புக் தளத்தால் சேமிக்கப்படுகின்றன. 

எனவே நாம் மேற்குறிப்பிட்டது போன்ற சங்கடமான சூழ்நிலைகளில், பேஸ்புக் தளத்தால் சேமிக்கப்பட்ட அந்த தகவல்கள் மூலம் நாம் Logout செய்ய தவறிய கணக்கை இனங்கண்டு அதனை உங்கள் கணினியின் மூலமோ அல்லது மொபைல் சாதனத்தை பயன்படுத்தியோ Logout செய்து கொள்ள முடியும்.

இதனை பின்வருமாறு மேற்கொள்ளலாம்.  • நீங்கள் தற்போது கணினியின் மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவர் எனின் உங்கள் பேஸ்புக் கணக்கின் Settings ===> Security பகுதிக்கு செல்க.


  • பின் அதில் Where You're Logged In என்பதை கண்டறிந்து அதற்கு நேரே இருக்கும் Edit என்பதை சுட்டுக.

  • இனி நீங்கள் எப்பொழுது, எங்கிருந்து, எதனை பயன்படுத்தி பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி உள்ளீர்கள் என்பது தொடர்பான அத்தனை தகவல்களும் பட்டியலிடப்படும்.


  • பின் அதில் நீங்கள் எதை Logout செய்ய மறந்தீர்களோ அதை சரியாக இனங்கண்டு End Activity என்பதை சுட்டுவதன் மூலம் Logout செய்ய மறந்துவிட்ட கணக்கை Logout செய்து கொள்ளலாம்.


நீங்கள் ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவர் எனின் இந்த செயற்பாட்டை மேற்கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.  • முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பேஸ்புக் செயலியை திறந்து கொள்க.  • பின் அதன் வலது மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளை கொண்ட Menu பகுதிக்கான Button ஐ சுட்டுக.


  • பின் அதில் Account Setting ===> Security ===> Active Sessions எனும் பகுதிக்கு செல்க. 


  • இனி குறிப்பிட்ட பகுதியில்,  நீங்கள் எப்பொழுது, எங்கிருந்து, எதனை பயன்படுத்தி பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி உள்ளீர்கள் என்பது தொடர்பான அத்தனை தகவல்களும் பட்டியலிடப்படும்.பின் அதில் நீங்கள் எதை Logout செய்ய மறந்தீர்களோ அதை சரியாக இனங்கண்டு அருகில் தரப்பட்டுள்ள X அடையாளத்தை சுட்டுவதன் மூலம் Logout செய்ய மறந்துவிட்ட கணக்கை Logout செய்து கொள்ளலாம்.

அவ்வளவுதான்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top