உலகையே ஒரு கிராமம் போல் மாற்றி இருக்கும் இன்றைய தொழில்நுட்பமானது உலகில் உள்ள எந்த ஒன்றையும் மிக சுலபமாக அடைந்து கொள்ள வழிவகுத்துள்ளது.

CCTV கேமரா ஆண்ட்ராய்டு


அந்தவகையில் டோக்கியோ நகரில் இடம்பெறக்கூடிய போக்குவரத்து நெரிசல்கள், ஜேர்மன் நாட்டில் இருக்கக்கூடிய மீன்தொட்டி, இத்தாலி நாட்டில் இருக்கக்கூடிய Positano எனும் கடற்கரை ஓரம் போன்ற இடங்கள் உட்பட உலகில் உள்ள 11000 இற்கும் மேற்பட்ட பொது இடங்களில் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளை நேரடியாக பார்க்க உதவுகின்றது லைவ் கேமரா வியூவர் எனும் ஸ்மார்ட்போன்களுக்கான செயலி.பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமரா மூலம் அந்த இடங்களில் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளை நேரடியாக எமது ஸ்மார்ட்போன் மூலமே பார்பதற்கு வழிவகுக்கும் இந்த செயலியை கீலே வழங்கப்பட்டுள்ள இனைப்பு மூலம் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ள முடியும்.லைவ் கேமரா வியூவர் செயலியின் பயன்கள் 


  • நீங்கள் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளீர்கள் எனின் இந்த செயலி மூலம் அந்த நாட்டு பொது இடங்களை பார்ப்பதன் மூலம் அந்த நாடு தொடர்பான அறிவை ஏலவே பெற்றுக் கொள்ள முடியும்.
  • மேலும் இந்த செயலி மூலம் பொது இடங்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நாட்டின் பொருளாதாரம், மக்களின் நடை உடை பாவனைகள், கலாச்சாரம், புவியியல் அமைப்பு போன்றவகைள் தொடர்பான அறிவையும் பெற்றுக்கொள்ள முடியும்.CCTV கேமரா Android செயலி  • மேலும் குறிப்பிட்ட ஒரு நாட்டின் ஒரு இடத்தில் இடம்பெறக்கூடிய காலநிலை, போக்குவரத்து நெரிசல்கள், ஏனைய நிகழ்வுகள் போன்றவற்றை இந்த செயலி மூலம் நேரடியாக கண்காணிக்கலாம்.
  • மேலும் இந்த செயலி மூலம் தோன்றக்கூடிய வீடியோ கோப்புக்களின் தரத்தை HD தரத்தில் அமைத்துக் கொள்வதற்கான வசதியும் இதன் Settings பகுதியில் தரப்பட்டுள்ளது.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top