தொழில்நுட்ப சாதனங்களின் அடுத்தான வருகையானது இன்றைய சமூகத்தினர் தொழிநுட்ப சாதனங்களில் கொண்டுள்ள அதீத ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகின்றது.

அந்த வகையில் பேர்லின் நகரில் இடம்பெற்றுவரும் Sony Xperia Z5, Sony Xperia Z5 Compact, Sony Xperia Z5 Premium மற்றும் Moto 360 2 Smart Watch போன்றவற்றை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

லெனோவோ Yoga Tab 3 Pro

அவ்வாறு உலகுக்கு அறிமுகப்படுத்தப்படும் சாதனங்களுள் "Yoga Tab 3 Pro" எனும் டேப்லெட் சாதனத்தையும் லெனோவோ நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது.


10 அங்குல Quad-HD திரையை கொண்டுள்ள இது 70 அங்குல ப்ரொஜெக்டர் வசதியையும் தன்னகமாக கொண்டுள்ளது.

மேலும் 2.24GHz வேகத்தில் இயங்கக்கூடிய Intel Atom x5-Z8500 Quad-core Processor மற்றும் 2GB DDR3 RAM போன்றவற்றை கொண்டுள்ள இது 16GB/32GB ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டுள்ளது நினைவகத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு microSD Card ஐ பயன்படுத்தி 128GB வரையில் நினைவகத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5MP தெளிவுத்திறனில் அமைந்த முன்பக்க கேமராவை கொண்டுள்ள இது Autofocus வசதியுடன் கூடிய 13 Megapixel பிரதான கேமராவையும் தன்னகமாக கொண்டுள்ளது.இவைகள் தவிர 4G LTE , WiFi, Bluetooth 4.0, GPS, GLONASS போன்ற வசதிகளுடன் கூடிய இது மின்சக்தியை நீண்ட நேரத்துக்கு சேமிக்கக் கூடிய வகையில் 10200mAh வலுவில் அமைந்த Battery ஐ கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Sources: fonearena

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top