4000mAh வலுவுடைய Battery ஐ கொண்ட  Aqua Power II எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது Intex நிறுவனம். இது 500 மணித்தியாலங்கள் வரை Stand By நிலையில் இருக்கக் கூடியதாகும்.


Intex ஸ்மார்ட் போன்


1280 x 720 Pixel Resolution இல் அமைந்த 5 அங்குல HD IPS திரையை கொண்டுள்ள இது கூகுளின் Android 5.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

1.3GHz வேகத்தில் இயங்கும் இதன் Processor ஆனது Quad-core Spreadtrum SC7731 எனும் வகையில் அமைந்ததாகும்.

இது 8 GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ளது மேலும் நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு இதன் நினைவகத்தை 32 GB வரை அதிகரித்துக் கொள்ள வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 1GB RAM ஐ கொண்டுள்ள இது LED flash வசதியுடன் கூடிய 5 மெகாபிக்சல் தெளிவுத்திறன் உடைய பிரதான கேமராவையும், 2 மெகாபிக்சல் தெளிவுத்திறன் உடைய முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது.

146 மில்லிமீட்டர் நீளம் 74 மில்லிமீட்டர் அகலம் 10.3 மில்லிமீட்டர் தடிப்பயையும் கொண்டுள்ள இதன் நிறை 152 கிராம் ஆகும்.


Dual SIM, 3G HSPA+, WiFi, Bluetooth 4.0, GPS போன்ற வசதிகளை கொண்ட இதன் விலை  6,490 ரூபாய்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது 98 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

தொடர்புடைய இடுகை:



Sources: Fonearena

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top